News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஆபாச வார்த்தைகள் பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிவருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் காளி பற்றிய பேச்சுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

நேற்று இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி, ‘’தன்னை நம்பி பார்க்கவத்தவர் ,தனக்காக வந்தவர்கள் கண்முன்னே சாகும்போது அவர்களை விட்டுவிட்டு ஓடிப்போவதற்கு பெயர் கோழைத்தனம் எங்கள் ஊர்ல அதை ஓடுகாலித்தனம் எனச் சொல்வார்கள் ! ஜெய்காளி ஓம்காளி விஜய் ஒரு ஓடுகாலி. இரண்டு தொகுதியிலும் டெபாசிட் காலி’’ என்று பேசியிருந்தார்.

இதற்கு தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ‘’தம்பி உதயநிதி… இனிமேல் அவரைத் தம்பின்னுதான் கூப்பிடப் போறேன். சட்டமன்றத்தில் ஓடுற காலம் வேற, தலையைச் சொரியுற காலம்தான் இந்தக் காலம்.

மதுராந்தகம் தொகுதியில் திமுக ஜெயித்துவிட்டால் என்னுடைய கட்சிப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து விடுகிறேன்’ என்று உதயநிதிக்கு நான் சவால் விடுகிறேன். அதே போல் திமுக தோற்று விட்டால் உதயநிதி கட்சிப் பதவியை ராஜினாமா செய்ய தயாரா? த.வெ.கவை விட திமுக ஒரு ஓட்டு அதிகம் பெற்று காட்டட்டும்’’ என்று சவால் விட்டுள்ளார்.

அதேநேரம் பாஜக, ஆர்.எஸ்.எஸ், இந்துக்கள் உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதன்படி பாஜகவின் தலைமைச் செயலாளர் நாராயணன் திருப்பதி, ‘’மதுராந்தகத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது ‘ஓம் காளி, ஜெய் காளி’ என்று கோஷமிட்டு பின்னர் த வெ க ‘ஓடு காலி’ என்று எதிரில் நிற்பவர்களை சொல்லுமாறு தூண்டுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

ஓம் காளி, ஜெய் காளி என்பது ஹிந்துக்களின் நம்பிக்கைகளை, வழிபாடுகளை குறிக்கும் மந்திரம். ஒட்டுமொத்த ஹிந்துக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய உதயநிதியை வன்மையாக கண்டிக்கறது பாஜக. ஒரே கேள்வி – இஸ்லாமிய- கிருஸ்துவ மத கோஷங்களை இதே போன்று கிண்டல் அடித்து எள்ளி நகையாட தைரியம் உள்ளதா உதயநிதி ஸ்டாலினுக்கு?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்துக்கள் விரட்டியடிக்கும் காலம் வரப்போகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link