Share via:
இடைத்தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கொச்சையாகவும் ஆபாசமாகவும் பேசிய உதயநிதி என்ற ஆபாசநிதியை விஜய்
ரசிகர்கள் பொளந்து கட்டுகிறார்கள்.
வீட்டுக்கு எதிரே பீச் இருக்கணுமாம், அப்பத்தான் மூடு வருமாம்,
தண்ணி வரலேன்னு சொன்னதுக்கே என் மேல கேஸ் போட்டாங்க என்று இரட்டை அர்த்தத்தில் உளறிக்
கொட்டியிருக்கிறார். இதைக் கேட்டு அவரது பெண் வேட்பாளரே தலை குனிந்து நிற்கும் நிலை
உருவாகியிருக்கிறது.
உதயநிதியின் ஆபாச பேச்சுக்கு தவெக, ‘’எதிர்க்கட்சித் தலைவராகப் பேச வேண்டிய பேச்சு இதுதானா? பரம்பரை பரம்பரையாகக் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் குடும்பச் சொத்தாக நினைப்பவர்களுக்கு, மக்கள் நலனைப் பற்றி யோசிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது? மேடை கிடைத்துவிட்டால் போதும்… கொள்கை, சாதனைப் பற்றிப் பேசத் தெரியாது, கொச்சையாக, நாலாந்தரமாக பேசுவதுதான் வாடிக்கையாகிவிட்டது.
எனவே,
ஆபாசமாகப் பேசுவதையும், தனிநபர் அருவருப்பான விமர்சனங்களை வைப்பதையும் மட்டுமே தங்கள் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குடும்ப ஆட்சி நடத்தி, கொத்தடிமைக் கூட்டத்தை மேய்த்தவர்களின் உண்மையான முகமும் லட்சணமும் இதுதான் என்பதை மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்கள். உங்கள் ஆபாசப் பேச்சுக்களுக்கு இடைத்தேர்தல் முடிவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்’’ என்று கண்டித்திருக்கிறார்கள்.
உதயநிதிக்கு இந்த தேர்தல் நிச்சயம் ஒரு பாடம் புகட்டும்.

