News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

இடைத்தேர்தலில் அதிமுக, திமுகவினர் போட்டி போட்டு வேலை செய்துவருகிறார்கள். இவர்கள் அத்தனை பேரையும் ஓட விடுவதற்கு விஜய் வருகிறார். மதுராந்தகம் தொகுதியில் நாளையும் தாராபுரம் தொகுதியில் 30ம் தேதியும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதையடுத்து கள நிலவரம் மாறிவிடும் என்கிறார்கள்.

இந்த நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்துள்ளது.  குறைந்த நாட்களில் தமிழக மக்களுக்கு அதிக நம்பிக்கையை முதலமைச்சர் விஜய் கொடுத்திருப்பதாக கூறி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நாளை மதியம் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் சுங்கச்சாவடி அருகே பிரச்சாரம் செய்கிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க 7,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் 2 நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். 30ம் தேதி தாராபுரத்தில் 54 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் விஜய் பேசுவதற்கு வேலைகள் நடக்கின்றன. மேலும் வாக்குசேகரிப்பு இறுதி நாளான அக்டோபர் 4ம்தேதி ரோடு ஷோ நடத்தி வாக்கு சேகரிக்க உள்ளதாக தெரிகிறது.

இப்போது தொகுதி மக்கள் ஆளுங்கட்சி மீது கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதாக உளவுத்துறை மற்றும் கள ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், பொதுத்தேர்தலில் தன் குரலுக்குக் கிடைத்த வரவேற்பைப் போல, இடைத்தேர்தலிலும் மக்கள் தன் பின்னால் நிற்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

விஜய் பேசியபிறகு கள நிலவரம் அப்படியே மாறிவிடும். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி நிற்பதற்கும் காரணம் தெரிவிப்பார் என்று சொல்லப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link