Share via:
தவெக ஆட்சி தொடங்கியதில் இருந்து மின்வெட்டு பெரும் தலைவலியாக
இருந்துவருகிறது. அதிகாரிகள், அமைச்சர்கள் சொல்வதைக் கேட்காமல், தானே அறிந்துகொள்வதற்கு
நேரடியாக விசிட் அடித்திருக்கிறார் முதல்வர் விஜய்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து
மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மக்களும் பல்வேறு பகுதிகளில் வீதிகளில் இறங்கி, மின்வெட்டுக்கு
எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மின்வெட்டு தொடர்பான புகார்களும்
நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்ட பலரும் பல்வேறு
காரணங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதிகாரிகளும் முதல்வருக்கு தினமும் உறுதிமொழி
கொடுக்கிறார்கள். ஆனால், நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்பதால் விஜய் கோபம் அடைந்துள்ளார்.
இந்நிலையில் முதல்வர் விஜய் இன்று காலை திடீரென சென்னை அண்ணா சாலையில்
உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். மின் உற்பத்தி,
மின் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு அலுவலங்களில் விஜய் ஆய்வு செய்து வருகிறார்.
அதேபோல மின் நுகர்வோர் குறை தீர்க்கும் மையமான மின்னகத்திலும் ஆய்வு செய்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் தற்போதைய மின் தேவை தொடர்பாக
அதிகரிகளிடம் கேட்டறிந்துள்ளார். மின்வெட்டு இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு
உத்தரவு போட்டிருக்கிறார்.
விஜய்யுடன் அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வில் பங்கேற்றார். ஆய்வு
முடிந்து கிளம்புகையில், குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு மகிழ்ச்சியுடன் கையசைத்தார்.
நல்லதே நடக்கட்டும்.

