News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுக ஆட்சியில் ஆதாரமில்லை என மூட முயன்ற வழக்கை போக்சோ நீதிமன்றம் நிராகரித்தது. அந்த வழக்கில் இப்போது 70 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இந்த விவகாரம் திமுக ஆட்சியின் அவலத்தைத் தோலுரித்துக் காட்டும் என்று சொல்லப்படுகிறது.

ஜெம் வீரமணி வழக்கில் ஒரு பகுதியாக பிரகாஷ் என அடையாளம் காணப்பட்ட ஒருவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலும், வீரமணியின் அலுவலகத்தில் பணியாற்றிய வீரா என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீரமணியுடன் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகம், தொழில்துறை உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நபர்களுக்கு பணம் வழங்கப்பட்டதா என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

அதோடு ஒரு பெண் காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு பத்திரிகையாளரிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். ஆரம்பகட்ட விசாரணையில், அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் அந்த பத்திரிகையாளர், காவல் ஆய்வாளர் மற்றும் ஒரு தொழிலதிபர் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர்கள் மூத்த காவல் அதிகாரி அல்லது அரசியல் தலைவர்களின் அறிவுறுத்தலின்படி செயல்பட்டார்களா என்பதையும் விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். வீரமணி தொடர்பான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வழக்குடன் தொடர்புடைய நபர்களுக்கு இடையே பணம் சென்ற விதம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் நோக்கம், விசாரணை அல்லது வழக்கின் பிற அம்சங்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக பணம் கைமாறியதா என்பதை கண்டறிவதாகும். சம்மன் அனுப்பப்பட்டவர்கள் மற்றும் பிடித்து விசாரிக்கப்படுபவர்களிடம் விசாரணை நடத்துவதுடன், அவர்களது வங்கி/நிதி ஆவணங்கள் மற்றும் விசாரணையில் சேகரிக்கப்பட்ட பிற ஆதாரங்களையும் போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.

ஆனால் இந்த விவகாரங்களில் இருந்து தப்புவதற்காக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, ‘’திமுக ஆட்சியில் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், புகார் வந்த அடுத்த நாளே எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தோம். ஆனால், தவெக ஆட்சியில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி கொடுத்த புகாருக்கு, செப்டம்பர் 21-ஆம் தேதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால், இந்த ஆட்சியில் 25 நாட்களுக்கு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? கோமாவில் ஆட்சி இருந்ததா? அல்லது டீலிங் ஏதாவது நடந்ததா?’’ என்று திசை திருப்பியிருக்கிறார்.

திமுக ஆட்சியில் வீரமணி வழக்கு கைவிடப்படவில்லை காலம் தாழ்த்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டாதக கூறிவது பொய். எதிர்காலத்தில் ஏதேனும் ஆதாரம் கிடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது எந்தவொரு வழக்கையும் முடிக்கும்போது காவல்துறை எழுதுகிற முடிவுரை தான் இந்த குறிப்பு. அதாவது அடுத்த ஆதாரம் கிடைக்கும் வரை இந்த வழக்கில் நடவடிக்கை கிடையாது. ஆதாரமே கிடைக்கவில்லை என்றால் எக்காலத்திற்கும் நடவடிக்கை கிடையாது. அதாவது வழக்கு இழுத்து மூடப்பட்டு விட்டது என்பதுதான் அதன் பொருள்.

இந்த வழக்கை மறுபடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது ஆகஸ்ட் 19 அதிலிருந்து ஒரே மாதத்திற்குள் பாலியல் குற்றவாளி வீரமணியும், அவனோட தொடர்புடைய இருவரும் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் (அப்போது சிறுமி) அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டு இன்னும் 10 சிறுமிகளின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது.

ஆக, வழக்கு வேகமெடுத்துவிட்டது. விஜய் ஒவ்வொரு நாளும் இந்த வழக்கின் அப்டேட் கேட்டு வருகிறார். அதனால், யாரையும் சும்மா விட மாட்டார் என்பது உறுதியாகப் போகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link