Share via:
சந்தீப் ராய் ரத்தோருக்கு சிறைத்துறை
தமிழகத்தின் 34வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இன்று மகேஷ் குமார்
அகர்வால் டிஜிபி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தால்
தமிழக டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் ராய் ரத்தோர் இன்று சிறைத்துறைக்கு மாற்றம்
செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் டிஜிபியாக இருந்தவர்களில் புதிய டிஜிபியாக
மகேஷ்குமார் அகர்வால் மட்டுமே இளம் வயதில் பொறுப்புக்கு வந்திருக்கிறார். 54 வயதில்
டிஜிபியாக வந்திருக்கும் மகேஷ்குமார் இன்னும் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.
இந்த நிலையில் சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள
நிலையில், இதுவரை சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக இருந்த கே.சங்கர் குற்றப்புலனாய்வுத்துறை
ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதிய டிஜிபிக்கான மூன்று பேர் கொண்ட பட்டியலை இந்திய அரசின் யுபிஎஸ்சி
UPSC பணியாளர் தேர்வாணைய உயர்மட்டக் குழு தமிழ்நாடு அரசுக்கு அளித்தது. இவர்களில் மகேஷ் குமார் அகர்வால் அல்லது சந்தீப்
ராய் ரத்தோர் ஆகியோரில் ஒருவரையே விஜய் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று அதிகாரபூர்வமாக மகேஷ்குமார் அகர்வால் தமிழகத்தின்
புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். யுபிஎஸ்சி பட்டியலில் முதல் இடத்தில் ராஜீவ்குமார்
இருந்தாலும், அவர் பெயர் விஜய் பரிசீலனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.