Share via:
தீய சக்தி என்று திமுகவை வார்த்தைக்கு வார்த்தை திட்டிக்கொண்டிருக்கும்
முதல்வர் விஜய், இன்று கருணாநிதிக்கு முன்னாள் முதல்வர் என்ற வகையில் பிறந்த நாள் வாழ்த்து
கூறியிருக்கிறார். ஆனால், அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று விஜய், ‘’முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.
கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல்,
ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்…’’
என்று கூறியிருக்கிறார்.
அதேபோன்று வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்
செய்யப்பட்டுள்ளனர். வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு
அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை
துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல், பேரிடர்
காலங்களில் நிவாரணம் வழங்குதல், தேவையான ஆலோசனைகள் வழங்குதல் போன்றவற்றை மேற்கொள்ளுமாறு
விஜய் கூறியிருக்கிறார்.
அதன்படி விழுப்புரம் மற்றும் கடலூர் – N. ஆனந்த்
சென்னை மற்றும் திருவண்ணாமலை – ஆதவ் அர்ஜுனா
மயிலாடுதுறை – P. வெங்கடரமணன்
திருவள்ளூர் – ரா. குமார்
திருநெல்வேலி – நெ. மரிய வில்சன்
பெரம்பலூர் – ராஜ்மோகன்
காஞ்சிபுரம் – ௧. தென்னரசு
திருப்பத்தூர் – R.V. இரஞ்சித்குமார்
செங்கல்பட்டு – த. சரத்குமார்
கள்ளக்குறிச்சி – வன்னி அரசு
ராணிப்பேட்டை – வ. காந்திராஜ்
தருமபுரி மற்றும் அரியலூர் – ப. ராஜ்குமார்
நாகப்பட்டினம் – A.M. ஷாஜகான்
தஞ்சாவூர் – வினோத்
திருச்சி – ரமேஷ்
கரூர் – சி. விஜயலஷ்மி
நாமக்கல் – த. லோகேஷ் தமிழ்செல்வன்
திருப்பூர் – டாக்டர் K.G. அருண்ராஜ்
நீலகிரி – செ. கமலி
வேலூர் – ம. விஜய் பாலாஜி
ஈரோடு – K.A. செங்கோட்டையன்
கோவை – வே. சம்பத்குமார்
மதுரை மற்றும் தேனி – R. நிர்மல்குமார்
புதுக்கோட்டை – ஜா. முகமது பர்வேஸ்
சிவகங்கை – டாக்டர் TK. பிரபு
கிருஷ்ணகிரி – S. கீர்த்தனா
விருதுநகர் – கு. ஜெகதீஸ்வரி
திருவாரூர் – பெ. விஸ்வநாதன்
தூத்துக்குடி – ஸ்ரீநாத்
இராமநாதபுரம் – பெ. மதன் ராஜா
சேலம் – ஆ. விஜய் தமிழன் பார்த்திபன்
கன்னியாகுமரி – செ. ராஜேஷ் குமார்
தென்காசி – ராஜீவ்
திண்டுக்கல் – ௧. விக்னேஷ்
