Share via:
முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் இன்று
காலை முதல் மத்திய குற்றப்பிரிவு சோதனை செய்து வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி
வாங்கி தருவதாக கூறி பல கோடி பெற்று மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை
மற்றும் திருச்சியில் அன்பில் மகேஷ்க்கு தொடர்புடைய 6 இடங்களில் சோதனை நடக்கிறது.
திமுக
ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
முந்தைய திமுக அரசிடமிருந்து அங்கீகாரம் பெற்றுத் தருவதாகத் தனியார்
பள்ளிகளிடமிருந்து, கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் மேல் லஞ்சமாகப் பெறப்பட்டதாகப்
புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் மற்றும்
திமுக நிர்வாகி பி.டி.அரசகுமாரை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசகுமார், கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில் தனக்கு
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம்
இருந்து நிரந்தர அங்கீகாரம், பள்ளித் தரம் உயர்வு, DTCP, CMDA உள்ளிட்ட அனுமதிகளை பெற்றுத்
தருவதாக கூறி பணம் வசூலித்து மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து சென்னை
மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில்
தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விஷயத்தில் அன்பில் மகேஸ் சிக்கியிருப்பதற்கு உறுதியானதால்
திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின்
வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அன்பில்
மகேஸ் தொடர்புடைய மேலும் 6 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடக்கப்போகிறதோ..?

