News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

மிசா விவகாரத்தில் அமைச்சரின் பிறப்பு பற்றி கேள்வி கேட்க எனக்கு உரிமை இருக்கிறது என்று எல்லை மீறி பேசிய ஆ.ராசா மற்றும் ஓடுகாலி என்று முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்த சேகர்பாபு மீது போலீஸ் நடவடிக்கை தொடங்கியிருப்பது தவெகவினரை உற்சாகமடைய வைத்துள்ளது.

 

திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறி, திமுக எம்.பி. ஆ.ராசா மீது சைதாப்பேட்டை போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆ.ராசாவின் பேச்சு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசியது தொடர்பாக உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக சார்பில் சந்தித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமாரை அவதூறாக பேசியதாக புகார் அடிப்படையில் சென்னை வடக்கு கரை காவல்துறை சார்பில் ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜய் தமிழ்நாடு திரும்பும்போது இரண்டு பேரும் சிறையில் இருக்க வேண்டும் என்று தவெகவினர் இப்போது குரல் எழுப்பிவருகிறார்கள். அது நடக்குமா என்று  பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link