Share via:
மதுராந்தகம் மற்றும்
தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும்
தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் கைப்பற்றினால் தான், எம்ஜிஆர் இமேஜை தக்கவைக்க முடியும் என்பதால், நேரடியாக களம்
இறங்க விஜய் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது.
பொதுவாக இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு
ஆளும் கட்சியின் முதல்வர் பதவியில் இருப்பவர்கள் செல்வதில்லை. ஆனால், திமுக., அதிமுக
இரு கட்சிகளையும் ஒரு சேர தோற்கடிப்பதற்கு விஜய் களமிறங்க வேண்டும்’’ என்று தவெக
ஆலோசகர்கள் விஜய்க்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
அதற்கு விஜய்,
“நான் தயாராக இருக்கிறேன். நமது ஆட்சியின்
முதல் ரிப்போர்ட் கார்டு சிறப்பாக இருக்க வேண்டும். அதோடு நம் மீது வேண்டுமென்றே அவதூறு
பரப்பும் இரண்டு திராவிடக் கட்சிகளும் எழுந்துவிடாமல் அடிக்கவேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.
இப்போது அதிமுக மட்டுமே ஓரளவு
கூட்டணி பலத்துடன் உள்ளது. திமுகவுக்கு பிரேலதா ஆதரவு மட்டுமே இருக்கிறது. காங்கிரஸ்,
விசிக, முஸ்லீம் லீக் போன்ற அனைத்து கூட்டணிக் கட்சிகளும் விஜய்க்கு ஆதரவு கொடுத்துவரும்
நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் தனித்துக் களம் காண்பதற்குப் பின்னே திமுகவின்
தூண்டுதல் இருக்கிறதா என்பதையும் விஜய் டீம் ஆய்வு செய்துவருகிறது.
திமுகவும் அதிமுகவும் என்னதான்
முட்டி மோதினாலும் டெபாசிட் கிடைக்காது என்று விஜய் டீம் இப்போதே அதற்கான நடவடிக்கையில்
இறங்கிவிட்டன. ஆட்டம் சூடு பிடிக்கட்டும்.

