Share via:
நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் பிராமணர்களுக்கு
பதவி கிடைத்திருக்கிறது. அதுவும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய
அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது மிகப்பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
இந்த சர்ச்சை குறித்து ரமேஷ், ‘’சாதி பார்த்து யாருக்கும் தமிழக
வெற்றிக் கழகத்தில் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. மதச்சார்பின்மை தான் தமிழக வெற்றிக்
கழகத்தின் முதல் கொள்கை. எங்களுக்கு மதமோ, சாதியோ, இனமோ, பணமோ, மொழியோ, பாலினமோ எந்தவித
பாகுபாடும் கிடையாது என்பதை உறுதியாக ஏற்றுக்கொண்டு தான் தவெகவில் சேர்ந்திருக்கிறோம்.
அதனால் எதைப் பார்த்தும் தலைவர் விஜய் வாய்ப்பு கொடுக்கவில்லை.
சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா? என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கினார்…’’
என்கிறார்.
அதேபோல் ஆதவ் அர்ஜுனா, ‘’ரமேஷின் சமூகம் எங்களுக்கு தெரியவே தெரியாது.
தவெக சாதியின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொண்டது கிடையாது” என்று பேசியிருக்கிறார்.
ஆனால் திமுகவினரே, ‘’ஆதவ் பேசுவது கடைந்தெடுத்தப் பொய். ரமேஷ்,
தாம்பரம் அருகில் வசிக்கிறார். ஐயர் பிரிவைச் சார்ந்தவர். ரமேஷூக்கு தாம்பரம் தொகுதி
கொடுத்திருக்கலாமே..? ஏன் ஐயர் பிரிவினர் அதிகம் வாழும், ஸ்ரீரங்கம் தொகுதி கொடுக்கப்பட்டது..?’’
என்று கேள்வி கேட்கிறார்கள்.
இந்து அறநிலையத்துறை தகுதியான இந்துக்கள் வசம் இருக்கவேண்டும்
என்று பாஜக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் பிராமின் கையில் இந்த பதவியை விஜய் கொடுத்தார்
என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா?
வழக்கம் போல் விஜய் இதற்கும் பதில் சொல்லப்போவதில்லை.