Share via:
அதிமுகவில் நிலவிய உச்சகட்ட குழப்பம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த குழப்பத்தை அமித்ஷா உத்தரவின் பேரில் லீமா ரோஸ் முடித்துவைத்ததாக சொல்லப்படுகிறது.
இன்று சிவி சண்முகம் தவிர மற்ற அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடி
பழனிசாமியை சந்தித்துப் பேசினார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக சபாநாயகர்
அவர்களிடம் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட
உள்ளார் என கடிதத்தை வழங்கி உள்ளனர்.
இதையடுத்து பேசிய வேலுமணி, ‘’எங்களுக்குள் கருத்து வேறுபாடு தான்,
பிளவு இல்லை இரு தரப்பும் சபாநாயகருடன் கொடுத்த மனுக்களை வாபஸ் வாங்கி விட்டேன். எடப்பாடி
தான் எங்கள் பொதுச்செயலாளர்’’ என்று பேட்டி அளித்திருக்கிறார்.
எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டப்பேரவை தலைவராகவும், தன்னை கொறடாவாகவும்
அங்கீகரிக்கக் கோரி சபாநாயகரிடம் அளித்த மனுவை சி.விஜய பாஸ்கர் திரும்பப் பெற்றுள்ளார்
அருண் மொழித்தேவனும் அவர் உடன் வந்துள்ளார். அதிமுகவில் இணைக்க மன்னிப்புக் கடிதம்
கேட்டதால், கோபத்தில் உள்ள சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்திக்கவில்லை
எனத் தகவல்
எடப்பாடி மற்றும் வேலுமணி தரப்பை இணைத்து வைத்த பெருமை லீமா ரோஸ்க்கு
உண்டு என்கிறார்கள். ஆரம்பமும் அவர்தான், முடிவும் அவர்தான். அதிமுக விவகாரம் அமித்ஷாவுக்குப்
போனதாகவும், இப்போது மோதல் வேண்டாம், சேர்ந்து இருங்கள் என்று கூறியதால் இணைப்பு நடந்ததாகவும்
சொல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் வளர்த்த கட்சியை இன்று அமித்ஷாவும்
லீமாரோஸும் காப்பாற்றுகிறார்கள்.
