Share via:
டெல்லியில் பிரதமர் சந்திப்புக்குச் சென்ற விஜய் இன்று சென்னைக்குத்
திரும்புகிறார். பிரதமருடன் ஏழுநிமிடம் சந்திப்பு, உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம்
ஒதுக்கப்படாதது போன்றவை கடும் சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாடு முதல்வர்கள் டெல்லி சென்றால் ஒட்டுமொத்த நாட்டின் ஊடகமும்
திரும்பி பார்க்கும். ஜெயலலிதா ஒருமுறை டெல்லி சென்று வாஜ்பாய் ஆட்சியையே கலைத்துவிட்டார்.
கருணாநிதி டெல்லி சென்று அதே வாஜ்பாய் ஆட்சியையும் பிறகு அடுத்த ஆண்டே மன்மோகன் சிங்
ஆட்சியையும் காப்பாற்றினார். ஸ்டாலின் டெல்லி சென்று இந்தியா கூட்டணியை உருவாக்கினார்.
ஆனால் பிரதமரை விஜய் 7 நிமிடங்கள் மட்டுமே சந்தித்திருக்கிறார்.
உள்துறை அமைச்சரை சந்திக்க முடியவில்லை, நிர்மலா சீதாராமனை மட்டுமே சந்தித்தார். இன்று
சோனியா காந்தி, ராகுல்காந்தி சந்திப்பு இருக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், விஜய்
யாரையும் சந்திக்காமல் சென்னைக்குத் திரும்புகிறார். மத்திய அரசுக்குப் பயந்து முடிவு
எடுத்ததாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் டெல்லி பயணத்தின் பொழுது அவரது வாகனத்தில்
விஷ்ணு ரெட்டி, முதல்வர் விஜயின் நண்பர் ஜெகதீசன் உடன் இருந்துள்ளனர் அதேபோல விஜயின்
தனிப்பட்ட பாதுகாவலர் நயம் மூஷா, அவரது தனிப்பட்ட ஓட்டுநர் உள்ளிட்டோர் மட்டுமே இருந்துள்ளனர்.
அமைச்சர்களோ, மூத்த அதிகாரிகளோ இடம் பெறவில்லை.
துணை அமைச்சராக இருந்த உதயநிதி பிரதமரை சந்தித்தபோது 27 நிமிடங்கள்
(வெளியே 45 நிமிடங்கள் என கூறப்பட்டது) பேசினார். ஆனால், விஜய்யுடன் நடந்த சந்திப்பு
வெறுமனே ஏழு நிமிடங்கள். இதற்கு மேல் விஜய்யிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று விரட்டியதாகச்
சொல்கிறார்கள்.
விஜய் சந்திப்பை உள்துறை அமைச்சர் அமித்ஷா விரும்பாத நேரத்தில்,
கேரள முதலமைச்சர் வி.டி சதீசனை சந்தித்து பேசியுள்ளார். திட்டமிட்டு விஜய் சந்திப்பு
நிராகரிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில
அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய
தெளிவுரை வழங்கக் கோரி விஜய் கொடுத்த கடிதம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு எதற்கு பிரதமர் ஒப்புதல் என்று
திமுகவினர் கொந்தளிக்கிறார்கள். அதேநேரம், டெல்லியில் வைத்தும் பிரஸ் மீட் கொடுக்காத
ஒரே முதல்வர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் விஜய். இந்த சாதனையை யாரும் முறியடிக்க
முடியாது என்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்குப் பெருமைதான்.
