Share via:
தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த டிஜிபி நியமனம்
ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது. மகேஷ்குமார் அகர்வால் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சங்கர் ஜிவால்
நியமிக்கப்பட்டார். அவர் ஓய்வுக்குப் பிறகு பொறுப்பு டி.ஜி.பி-யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார்.
நிரந்தர டி.ஜி.பி தேர்வு செய்வதில் குழப்பம் இருந்ததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டது.
இந்தச் சூழலில்தான் தமிழகத்துக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் மாற்றப்பட்டு சந்தீப்ராய் ரத்தோரை தேர்தல்
ஆணையம் நியமித்தது. இந்தநிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியை தேர்வு செய்யும்
யு.பி.எஸ்.சி கூட்டம் டெல்லியில் நடந்தது. சீனியரிட்டி அடிப்படையில் சீனியர் டி.ஜி.பி-க்கள்
ராஜீவ்குமார், சந்தீப்ராய் ரத்தோர், மகேஷ்குமார் அகர்வால் ஆகிய மூன்று பேரில் ஒருவரை
டி.ஜி.பியாக நியமிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி மகேஷ்குமார் அகர்வால், டி.ஜி.பியாக
நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2032 வரை பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,
நிரந்தரமான டிஜிபியின் பணி சிறக்கட்டும்.