Share via:
காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று ஸ்டாலின்
காட்டிய செய்கையை, சட்டமன்றத்தில் விஜய் செய்து அது வைரலானது. இப்போது மிசா, மிசாவில்
என்ன நடந்தது என்பது தெரியும் என்று விஜய் காட்டிய புதிய ஸ்டைல் மீண்டும் வைரலாகி வருகிறது.
இதற்கும் திமுகவினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.
அதாவது, மிசா கைதி ஸ்டாலினை கிண்டல் செய்யக்கூடாது என்கிறார்கள். ஏன் ஸ்டாலினை கிண்டல்
செய்யக்கூடாது என்று தவெகவினர் கேட்கிறார்கள். விஜய்யை திரிஷா கூட சேர்த்து வைத்து
பல திமுக மேடை பேச்சாளர்கள் பேசும் போது, தட்டிக் கேட்காமல் சிரிச்சிட்டே வேடிக்கை
பார்த்தவர்தானே ஸ்டாலின்.
விஜய்யின் கை கால் உடைப்பேன் என்று திமுக கட்சி மார்க்கண்டேயன்
பேசுனத்துக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தவர்தானே ஸ்டாலின். அவர்கள்
அடாவடி செய்யும் போது ஸ்டாலின் என்ன செய்தார்..? இப்போது விஜய் சைகை காமிச்சது தப்பு
என்பது என்ன நியாயம். திமுக போன்ற பொறுக்கி கும்பலை விஜய் வழியில் தான் கையாள வேண்டும். சுருக்கமாக சொன்னால் திமுக என்னும்
மிருகத்துக்கு விஜய் தான் வேட்டைக்காரன். காலம் காலமாக சட்டமன்றத்தில் எதிர்ப்பதற்கு
ஆள் இல்லாமல் சண்டியர் ஆக வலம் வந்த திமுகவை இன்று ஒரே அடியில் சினிமா கதாநாயகன் நிஜ
கதாநாயகனாக மாறி கொத்து புரோட்டா போட்டுவிட்டார்’’ என்று கொண்டாடுகிறார்கள்.

