News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

 

திங்களன்று உளறல்நிதி சட்டப்பேரவையை விட்டு ஓடாமல் இருப்பாரா? என்று தவெகவினர் இப்போதே கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.  

இதுகுறித்து பேசும் தவெகவினர்,’’கல்யாணம், காது குத்து நிகழ்ச்சிகளில் பேசுவது போல் சட்டப்பேரவையிலும் உளறிவிட்டு, “உடனே பதில் வேண்டும்” என அடம்பிடித்த உதறல்நிதியே! பல நாட்களாக ஸ்கிரிப்ட் தயார் செய்து வந்து பேசும் பவளவிழாப் பாப்பாவுக்கு, சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரல் என்னவென்றே தெரியாதா? இல்லை யாரும் சொல்லித் தரவில்லையா?

காலையில் சட்டப்பேரவைக்கு வந்துவிட்டு, மதியமானதும் ஓட்டமெடுக்கும் ஓட்டநிதியே! திங்கள்கிழமை மாண்புமிகு முதலமைச்சர் பதிலுரையாற்றும்போது, இருக்கையில் அமர்ந்து பொறுமையாகக் கேட்கும் தைரியம் இருக்குமா? அல்லது “அவசரம்” என்று பதிலைக் கேட்காமல் ஓட்டமெடுப்பீரா? திங்களன்று தெரிந்துவிடும்…’’ என்று கலாய்க்கிறார்கள்.

அதேபோல் தவெக ஐ.டி.விங், ‘’காலையில் பால்வாடி பாப்பா போல் வருவது… எழுதிக் கொடுத்த script-ஐ திக்கித் திணறி வாசிப்பது… அதிலும் நடக்காததை நடந்ததாகக் கூறி சட்டப்பேரவைத் தலைவரிடமே குட்டு வாங்குவது! பிறகு அமைச்சர்கள் பதில் சொல்லத் தொடங்கினால், அதை எதிர்கொள்ள script-ல் ஏதுமில்லாததால் மடக்கு மடக்கென தண்ணீர் குடிப்பது… அவசரமென்று ஓடுவது! மதியமானதும், “எனக்கும் பசிக்கும்ல!” என்ற mode-க்கு மாறி, சாப்பிடப் போகிறேன் என்று சாக்கு சொல்லிவிட்டு வீட்டிற்கு ஓடிவிடுவது!

கேள்வி மட்டும் கேட்கத் தெரிந்த பால்வாடி பாப்பாவிற்கு, பொறுமையாக அமர்ந்து பதிலைக் கேட்கும் தில்லு, தெம்பு, திராணி, முதுகெலும்பு எல்லாம் இருக்கிறதா? பயந்து ஓடுவதைப் பரம்பரைப் பழக்கமாகக் கொண்ட ஓட்டநிதி, திங்கட்கிழமை பதிலை அமர்ந்து கேட்பாரா? அல்லது… வழக்கம்போல் ஓட்டமெடுப்பாரா?’’ என்று கேட்கிறார்கள்.

இதற்கு திமுகவினர், ‘’எழுந்து சத்தம் போட்டால் திமுக ரவுடித்தனம் என்பது அமைதியாக இருந்தால், ஒப்புக்கொண்டார்கள் என்பது, வெளிநடப்பு செய்தால் பயந்துவிட்டதாகச் சொல்வதுதானே தவெக ஸ்க்ரிப்ட். திங்களன்று வேடிக்கை பாருங்கள்’’ என்கிறார்கள்.

வேடிக்கை பார்க்கலாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link