Share via:
மோடியை ராகுல்காந்தியால் வீழ்த்தவே முடியாது என்பது அனைவருக்கும்
தெரிந்த நிலையில், காக்ரோச் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்தது. அதற்குள்
அந்த கட்சிக்குள் எக்கச்சக்க முரண்பாடுகள். இந்த நிலையில் விஜய் அடுத்த பிரதமர் என்று
இந்தியா முழுக்க குரல் கேட்கிறது.
இன்று சட்டசபைக்கு வந்த கவுண்டம்பாளையம் தொகுதி தவெக எம்.எல்.ஏ.
கனிமொழி, ‘’2029 பிரதமர் வேட்பாளர் நம்ம தளபதி விஜய் தான்.. ராகுல் காந்தி தான் நம்ம
தலைவர் கைய பிடிச்சு கூட்டிட்டு போய் பிரதமர் சீட்ல உட்கார வெக்க போறாரு…” என்று
மகிழ்ச்சி பொங்க பேசியிருக்கிறார்.
அதேபோன்று அமைச்சர் நிர்மல்குமார், ‘’முதலமைச்சர் விஜய் நாளைய
பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் கொடுக்காமல், இப்போது அது பற்றி
பேசவேண்டிய அவசியம் இல்லை. முதல்வராக வரவே மாட்டார் என்று எல்லோரும் சொன்னார்கள். வந்து
காட்டியிருக்கிறார். அதேபோன்று இந்தியா முழுக்க விஜய் பிரதமராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
அது பற்றி பேசவேண்டாம்’’ என்று நழுவியிருக்கிறார்.
முதல்வர் விஜய் எப்படி பிரதமராவார் என்ற கேள்விக்கு தவெகவினர்,
‘’தமிழ்நாடு, புதுவை சேர்த்து 40 தொகுதிகள் கிடைத்துவிடும். கேரளா, கர்நாடகாவில் தலா
20 தொகுதிகள் கிடைக்கும். எனவே தவெக 80 தொகுதிகள் வென்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ், மாயாவதி, ஆம் ஆத்மி, தெலுங்கானா, ஆந்திராவில் ஆதரவு கட்சிகள்
எம்.பி.க்களுடன் பிரதமராக அமர்வார். மோடிக்கு முடிவுரை எழுத ராகுல்காந்தியால் முடியாது.
எங்கள் விஜய்யால் மட்டுமே முடியும்’’ என்று உறுதியுடன் தெரிவிக்கிறார்கள்.
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை
ராஜினாமா செய்வோம்னு சொன்ன அந்த காங்கிரஸ் மானஸ்தர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே
தெரியவில்லையே.

