News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் நாட்டுக்குப் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் விஜய் தலைமையிலான தவெக அரசு சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு – 2026’ நடத்தியது. இந்த மாநாட்டில் ரூ.67,452 கோடிக்கு 97 முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த மாநாட்டில் தமிழகத்தை அடுத்த 10 ஆண்டுகளில் (2036) 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவது தங்கள் இலக்கு என்று தமிழக தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்ததிருந்தார்.

தென் மாநிலங்களில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் மற்றும் ஆந்திரா இடையில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பணிகளை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. ‘செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப்’ உள்ளிட்ட தொழில் துறைகளில் ஈடுபட்டுள்ள பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும், ‘செமிகான்’ மாநாடு, இந்த வாரம் தைவானில் நடக்கிறது. இதில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு, தைவானில் வரும் 4ம் தேதி நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

முதல்வர் விஜய், தொழில் துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவினர், வரும் 10ம் தேதி பிரிட்டன் செல்ல உள்ளனர். அக்குழுவினர், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில், 16ம் தேதி வரை சுற்றுப் பயணம் செய்து, அந்நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க உள்ளனர்.

முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகியோரை விட அதிக முதலீடு ஈர்ப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயணம் வெற்றிகரமாக அமையட்டும். தமிழகத்தின் நிதிநிலைமை சீரடையட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link