News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் ஐக்கியமாகியிருக்கும் சி.விஜயபாஸ்கருக்கு கெட் அவுட் சொல்லும் மூடில் முதல்வர் விஜய் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக போன்று வாஷிங் மெஷின் என்ற பேர் வாங்கக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுத்திருப்பதாக சொல்கிறார்கள். இதற்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனு, முக்கிய இடம் பிடித்திருக்கிறது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பெற்ற 4 கோடி ரூபாயை திருப்பித் தராமல் ஏமாற்றிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, ஆலங்குடி அதிமுக வேட்பாளர் தனவிமல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த தனவிமல் தாக்கல் செய்துள்ள மனுவில், சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்திருக்கிறார்.

இது சம்பந்தமாக அப்போது மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தன்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தேர்தல் செலவுகளை மேற்கொள்ளும் தகுதியை நிரூபிக்க ரூ.5 கோடி தரும்படி கேட்டுள்ளார்.  வேட்பாளர் பட்டியல் அறிவித்ததும் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக வாக்கு கொடுத்துள்ளார்.

அதன்படி, 4 கோடியே 50 லட்சம் ரூபாயை திரட்டி, சி.விஜயபாஸ்கர் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் சோத்துப்பாலை முருகேசன் என்பவரிடம் கொடுத்ததாகவும், வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் செலவுகளுக்காக பணத்தை திருப்பிக் கேட்டபோது, 50 லட்சம் ரூபாய் மட்டுமே திருப்பி தந்துவிட்டு மீதமுள்ள தொகையை சுருட்டிவிட்டார்’’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பணத்தை திருப்பிக் கேட்ட போது மிரட்டல் விடுத்ததாகவும், இதுசம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயபாஸ்கரால் தவெகவுக்கு அவமானம் ஏற்படக்கூடாது என்பதற்காக, அவரை கட்டம் கட்டும் முடிவுக்கு விஜய் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. விஜய் சாதிப்பாரா என்று பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link