News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

சட்டமன்றத் தேர்தல் விவகாரத்தில் செல்வப்பெருந்தகை மீது மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றவர்கள் நேரடியாகவே விமர்சனம் வைத்தார்கள். இந்த இரண்டு பேரில் ஒருவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக சொல்லப்படுகிறது. அதிலும் ஜோதிமணிக்கு அதிக வாய்ப்பு என்று சொல்வது காங்கிரஸ் கட்சியினரை கதறவிடுகிறது.

செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘’என் மீதான விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கடந்த தேர்தலில் 25 தொகுதிகள் வாங்குனாங்க. இப்போ கூடுதலாக மூன்று இடங்களும், 1 ராஜ்ய சபா சீட்டும் வாங்கியுள்ளோம். இது அழிவுப்பாதையா?

நான் தலைவராக வந்த பிறகு நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை கொடுத்து இருக்கிறேன். வேட்பாளர் தேர்வை காங்கிரஸ் தலைமை தான் முடியும். நான் ஏமாத்தி யாரையும் வேட்பாளாராக நிறுத்த முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு ராகுல்காந்தி பேச்சை தப்பும் தவறுமாக மொழிபெயர்த்தது குறித்து, ‘’அரசு பள்ளியில் படித்தவன். எனக்கு அவ்வளவுதான் தெரியும். மேலும் ராகுல் பேச்சு எனக்குத் தெளிவாகக் கேட்கவில்லை’’ என்று கூறியிருப்பது கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது.

இங்கிலீஷ் தெரியாது என்றால் தெரிந்தவர்களை மொழிபெயர்க்கச் சொல்லி இருக்க வேண்டுமே தவிர, தப்பும் தவறுமாக மொழிபெயர்த்துவிட்டு, அதை சமாளிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விமர்சனம் வைக்கிறார்கள்.

தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக செல்வப்பெருந்தகை கூறியிருந்தார். அதனால், யார் ஜெயித்தாலும் தோற்றாலும் காங்கிரஸ் கட்சிக்கு செம என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link