Share via:
கொளத்தூர் தொகுதிக்குப் போகவே தேவையில்லை, அத்தனை நலத்திட்டங்கள்
செய்திருக்கிறேன் என்று ஸ்டாலின் சொல்லியிருந்தார். ஆனால், அந்த தொகுதியில் ஸ்டாலின்
தோற்றுப் போயிருக்கிறார்.
இதுவரை திமுக பல தோல்விகளை கண்டுள்ளது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதி
தோல்வியே கண்டதில்லை. திமுக தலைவராகவும் முதல்வராகவும் இருந்த ஸ்டாலின் தோல்வி அடைந்திருக்கிறார்.
வரலாற்றில் முதன்முறையாக திமுக தலைவராக இருந்த ஸ்டாலினும் பொதுச்செயலாளராக
இருந்த துரைமுருகனும் தோற்றுப் போயிருக்கிறார்கள்.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று பேரெழுச்சியுடன் 2021ம் ஆண்டு
ஆட்சிக்கு வந்தார். ஏராளமான நலத்திட்ட உதவிகள் கொண்டுவந்தார். தேர்தல் நேரத்தில் 5
ஆயிரம் ரூபாய் பணம் போட்டார்.
இத்தனை செய்தும் விஜய் எழுச்சியை சரியாகக் கணிக்கவில்லை. கரூர்
சம்பவத்துக்கு அவர் விஜய் மீது குற்றம் சாட்டவில்லை என்றாலும், திமுக தன்னை குற்றம்
சொன்னதாக விஜய் தொடர்ந்து பேசினார். அதற்கு திமுக பதில் சொல்லவில்லை. அதனால் விஜய்
சொன்னது உண்மை என்று ஆகிப்போனது.
திமுக தோற்றுப்போனதை விட ஸ்டாலின் தோற்றுப்போனது தமிழக வரலாற்றில்
மிகப்பெரும் அதிர்ச்சி சம்பவம். மோடியை எதிர்த்து நிற்பதில் உறுதியானவர் என்று சொல்லப்பட்ட
ஸ்டாலின் இப்போது ஒரு சாதாரண மனிதரால் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
பரிதாபம்.
