Share via:
விஜய் ஆட்சி அமைப்பார் என்று அவரது ரசிகர்கள் இன்னமும் நம்பிக்கொண்டு
இருக்கும் சூழலில், தேர்தலை முன்னிட்டு தவெக நிர்வாகிகளுக்கு விஜய் டீம் ரகசிய உத்தரவு
பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வரும் மே 4-ம் தேதி வெளியாகஉள்ளன. ஆட்சியில் அமரப்போவது யார்
என்பதில் ஆளுங்கட்சியான திமுக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் முதல்
விஜய்யின் தவெக ஆகிய மூன்று கட்சிகளுமே அதீத நம்பிக்கையில் உள்ளன. சீமான் மட்டுமே
ஆசை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறார்.
அதேநேரம், இந்த முதல் தேர்தலிலேயே ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைப்
பிடித்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் தவெகவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இதையொட்டி பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தீவிர ஆலோசனைக் கூட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை நாளன்று வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய
பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அடுத்தகட்ட
நகர்வுகள் குறித்து இந்தத் தொடர் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பனையூரில் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் 50 ஆயிரத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகக்
கருதப்படும் 50 வேட்பாளர்கள் நேரில் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடத்தில்
புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் தேர்தல் முடிவு நாளில் பின்பற்ற வேண்டிய வியூகங்கள்
குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்கள்.
அதன்படி “தேர்தலுக்கு பிந்தைய கள ஆய்வுகள் நமக்குச் சாதகமாக
உள்ளன. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது, வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள்
விழிப்புடன் இருக்க வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவாகும் வாக்குகளைச்
சரியாகச் சரிபார்க்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை கவனக்குறைவாக
இருக்கக் கூடாது.
குறைவான வாக்கு வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறும் தொகுதிகளில்,
எதிர்க்கட்சியினர் மறுவாக்கு எண்ணிக்கை கோரவோ, வழக்குத் தொடரவோ வாய்ப்புகள்
அதிகம். அத்தகைய சூழல்களை எதிர்கொள்ள சட்ட வல்லுநர்களுடன் தயார் நிலையில் இருக்க
வேண்டும். முடிவுகள் வெளியாகும் போது தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து,
ஜனநாயக முறைப்படி வெற்றியை உறுதி செய்வதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்”
எனத் தெரிவித்திருக்கிறார்கள்.
விஜய்யின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு என்பதால், அவரது ரசிகர்கள்
செம உற்சாகமாகியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று வழங்குவது குறித்து
இன்று சென்சார் போர்டு தகவல் தெரிவிக்க உள்ளது. தணிக்கை குழு அதிகாரிகள் ஜனநாயகன் படத்தை மீண்டும்
பார்த்துள்ள நிலையில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மே 1ம் தேதி ஜனநாயகன் படத்தை வெளியிட
முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
