Share via:
வரும் மே4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின்
தலையெழுத்தை மாற்றப்போவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இனி, தனித்து ஆட்சியைப் பிடிக்க
முடியாது என்பது இந்த தேர்தலில் முடிவுக்கு வந்துவிடும் என்பதால் தம்பிகள் தடுமாற்றத்துடன்
இருக்கிறார்கள்.
கடந்த பல தேர்தல்களை போன்றே இந்த தேர்தலிலும் 234 தொகுதிகளிலும்
நாம் தமிழர் கட்சி போட்டியிட்டுள்ளது. இந்த முறை மாநில கட்சி என்று அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது.
இந்த நிலையில் இந்திய குடியரசு கட்சி தலைவரும் மத்திய சமூகநீதி
மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே 51 தொகுதிகளில் தனது
கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார். அவரது
கட்சியினர் சில தொகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்தில் பலர் போட்டியிட்டனர்.
இதனிடையே நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஒரு சில தொகுதிகளில்
நாம் தமிழர் கட்சியின் ஏர் கலப்பை விவசாயி சின்னத்துக்கும் ராம்தாஸ் அத்வலையின் கரும்பு
விவசாயி சின்னத்திற்கும் பெரிய இடைவெளி இல்லை. சொல்லப்போனால் ஒரு சில தொகுதிகளில் அருகருகே
இருந்தது. இந்த நிலையில் தான் ஆர்வக்கோளாறில் சில நாம் தமிழர் தம்பிகள், கரும்பு விவசாயி
சின்னத்துக்கு வாக்களித்துவிட்டு அதனை பெருமையோடு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்
பதிவிட்ட சம்பவமும் நடந்தது.
நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை ஒவ்வொரு தேர்தலிலும் அதன் வாக்கு
எண்ணிக்கை உயர்ந்துவந்துள்ளது. ஆனால், இந்த தேர்தலில் விஜய் காரணமாக வாக்கு சதவீதம்
குறையும் என்பதை அவரது கட்சியினரே ஒப்புக்கொள்கிறார்கள்.
இந்த தேர்தலில் சுமார் 12.5 லட்சம் புதிய வாக்காளர்கள் முதல்முறை
வாக்களித்துள்ள நிலையில், சீமானை விட விஜய்யை நோக்கியே பலரும் நகர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது.
எனவே கடந்த தேர்தலில் 8.2% சதவீதமாக இருந்த வாக்குவங்கி 3% ஆக சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த தேர்தலில் சீமான் தனது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக்
கொண்டாரா அல்லது விஜய்யின் வருகை அவரைப் பாதித்ததா என்பதைத் தெளிவாக உணர்த்திவிடும்.
ஒருவேளை நாம் தமிழர் கட்சி தனது வாக்கு எண்ணிக்கையை உயர்ந்தால்,
அது அவர்கள் தமிழக அரசியலில் அசைக்க முடியாத ஒரு சக்தியாக எதிர்த்து நிற்பார் என்று
சொல்லப்படுகிறது. அப்படி இல்லையென்றால் விஜய் போன்ற புதிய சக்தியை நோக்கி தள்ளப்படுவார்
என்று சொல்கிறார்கள்.
மற்ற கட்சிகளுக்கு எப்படியோ, சீமானுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்தான்.
