News

விஜய்க்கு அமைச்சரவை ரெடி. த்ரிஷாவுக்கு பதவி இல்லையாம்

Follow Us

நடந்து முடிந்திருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செலவு செய்திருப்பதாக ஒரு கணக்கு சொல்லப்படுகிறது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், ஒரு ஓட்டுக்கு 500 ரூபாய் முதல் 1,000 ரூபாய் வரை விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் 1,000 ரூபாய் என்றும் அதிகபட்சம் 2,000 ரூபாய் என்றும் பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பல தொகுதிகளில், பொதுமக்களே ஓட்டுக்குப் பணம் கேட்டுப் போராட்டமே நடத்தியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான மக்களுக்கு இரண்டு முக்கிய கட்சிகளும் பணத்தை வாரி இறைத்துள்ளன. கிட்டதட்ட 5 கோடி பேருக்கு இரண்டு கட்சிகளும் ஆயிரம் ரூபாய் கொடுத்திருப்பதாக கணக்கு போட்டாலே 10 ஆயிரம் கோடி ரூபாய் பணமாக மட்டும் வாக்காளர்களுக்கு செலவிடப்பட்டுள்ளன.

இதுதவிர, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பிரச்சாரத்துக்கென 5 ஆயிரம் கோடி ரூபாய் என ஒட்டுமொத்தமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வாரியிறைக்கப்பட்டுள்ளன.

இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து பதவிக்கு வருபவர்கள், போட்ட பணத்தை வசூல் செய்யத்தானே செய்வார்கள். பணம் வாங்கிய மக்களுக்கு அவர்களைத் தட்டிக் கேட்பதற்கான உரிமை பறிபோய்விடுகிறது என்பதே உண்மை.

ஆனால், இத்தனை கோடி ரூபாயையும் ஆக்கபூர்வமாக செலவழித்தால் தமிழகம் செழிப்பாக மாறிவிடும் என்பதே உண்மை. அதாவது அரசு பள்ளி, அரசு மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களில் மட்டும் இந்த பணத்தை செலவழித்தால், தமிழகம் சொர்க்கபூமியாக மாறிவிடும்.

பணம் இத்தனை தூரம் விளையாடியிருக்கிறது என்பது தேர்தல் கமிஷனுக்கு நன்றாகவே தெரியும். அதோடு மத்திய பாஜக அரசுக்கும் தெரியும். இத்தனையையும் வேடிக்கை பார்க்கிறது மோடி அரசு. ஏனென்றால், அவர்கள் கட்சியும் பணப் பட்டுவாடா செய்திருக்கிறது.

இப்படி பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்திருக்கும் கட்சிகள் நல்லாட்சி கொடுக்கும் என்று நம்புவது எத்தனை மடத்தனம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link