News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததை எதிர்த்தே போராடுகிறோம் என்று வேலுமணியும் சிவி சண்முகமும் பேட்டி கொடுத்திருப்பது மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கட்சியை உடைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறியிருப்பதை அடுத்து எடப்பாடி என்ன செய்யப்போகிறார் என்பது கேள்வியாகியுள்ளது.

நேற்றைய தினம் எடப்பாடி பழனிசாமி மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டதை விஜய் கண்டுகொள்ளாததும் பல்வேறு கேள்வி எழுப்பியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை அடுத்து அதிமுகவில் எக்கச்சக்க குழப்பங்கள்.  எடப்பாடி தலைமையில் ஒரு அணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாக மோதுகிறார்கள். இதற்கு பின்னணியில் பாஜக இருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. பல தொகுதிகளில் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதோடு, பல முக்கிய வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

அதிமுக தொடர்ந்து 11வது தோல்வியை பெற்றுள்ளதால் தோல்விக்கான முழுப்பொறுப்பையும் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு, அவர் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று அதிமுக முன்னணி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சி.வி.சண்முகம் இல்லத்தில் தீவிர ஆலோசனைகள் நடந்தது. இதில் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 எம்எல்ஏக்களில் சுமார் 30 பேர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி அணிக்கு ஆதரவாக இருப்பதாக தகவல்கள் பரவியது.

மேலும், இந்த அணியினர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு 32 எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லையென்றால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயும் என்பதால், அதற்கான கணக்கீடுகளும் நடந்து வருகின்றன. இதற்காக 30 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்கள் தயாராகிவிட்டன. விரைவில் விஜய்யை சந்தித்து ஆதரவு கடிதம் வழங்க வேலுமணி, சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டு வருகிறனர். அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணியை கொண்டு வர முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

நேற்று முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காலை 9.15 மணியளவில் சட்டசபைக்கு வந்தார். ஆனால், வழக்கமாக அவருடன் வரிசையாக வரும் எம்எல்ஏக்கள் பலர் அப்போது அவருடன் இல்லை. அவருடன் ஆதரவாளர்களாக கருதப்படும் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே வந்திருந்தனர்.

இதற்கு மாறாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மற்றொரு பெரிய அணியாக அதிமுக எம்எல்ஏக்கள் காலை 9.25 மணியளவில் சட்டசபைக்கு வந்தனர். இதனால், அதிமுகவில் இரட்டை அதிகார மையம் உருவாகிவிட்டதா? என்ற கேள்வி எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சியினருக்கான வரிசையில் இரண்டாவது இருக்கையில் அமர்ந்திருந்தார். கடந்த காலங்களில் அவரைச் சுற்றி அமர்ந்திருந்த பல எம்எல்ஏக்கள் இம்முறை வேறு வேறு இடங்களில் அமர்ந்தனர். எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏவாக பதவியேற்றபோது அதிமுக உறுப்பினர்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால், எஸ்.பி.வேலுமணி பதவியேற்றபோது பெரும்பாலான அதிமுக எம்எல்ஏக்கள் மேஜையைத்தட்டி வரவேற்றனர். எஸ்.பி.வேலுமணி மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமியிடம் வணக்கம் தெரிவித்தாலும், அருகில் அமராமல் தனி அணியுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமிக்க வேண்டும் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மரகதம் குமரவேல், தளவாய் சுந்திரம், கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்ட 17 எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் சபாநாயகரிடம் நேற்று வழங்கப்பட்டது. அதில், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் செயல்படுவர் என கூறப்பட்டிருந்தது.

வேலுமணி தலைமையில் சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்ட 30 அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ஒரு கடிதம் வழங்கினர். அந்த கடிதத்தில் எஸ்.பி.வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழு தலைவராகவும், சட்டமன்ற கட்சி துணை தலைவராக ஹரி, கொறடாவாக சி.விஜயபாஸ்கரை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சட்டமன்றத்தை பொறுத்தவரை மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ. வைத்திருப்பவர் அணி பக்கம் கட்சி கட்டுப்பாடு முழுவதும் செல்லும். அந்த வகையில் 31 எம்.எல்.ஏ.  வைத்திருக்கும் அணி பக்கம் கொரடா அதிகாரம் செல்லும். அவர்கள் வைத்ததே யாருக்கு பெரும்பான்மையில் ஆதரிப்பது என்பது. பிடிக்கிறதோ இல்லையோ ஒரு திராவிட கட்சி அழியும் நிலையை எட்டுகிறது.

எதிர்பார்த்தது போலவே டெல்லி ஸ்கெட்ச் மிகச்சரியாக வேலை செய்து, அதிமுக என்ற கட்சி பெருத்த உடைப்பை சந்திக்கிறது. அத்தனையும் மோடி வேலை என்று அதிர்ந்து நிற்கிறார்கள் அதிமுக உண்மை தொண்டர்கள்.

ஒரு கட்சியை மண்ணுக்குள் புதைக்கிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link