News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

தீயசக்தி என்று வர்ணித்த ஸ்டாலின், சீண்டவே செய்யாத சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் கொடுத்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் விஜய். அதோடு, பள்ளி கல்லூரிக்கு அருகிலிருந்த டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு உத்தரவு என்று விஜய் ராஜ்ஜியம் சூடு பறக்கிறது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெறச் சென்ற விஜய்யை ஆரத்தழுவி உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்குள் அழைத்து சென்றார். வீட்டுக்குள் சென்றதும் காத்திருந்த ஸ்டாலின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாழ்த்து வாங்கிவிட்டு விடைபெற்றார்.

இதையடுத்து வைகோ, அன்புமணி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை சந்தித்த  விஜய், யாரும் எதிர்பாராத வகையில் சீமானையும் நேரில் சந்தித்து புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 717 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், ‘’தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து மூன்று இடங்களில் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டது.

பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு வழிபாட்டுத்தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் என மொத்தம் 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை அடுத்த இரண்டு வாரத்திற்குள் மூடவேண்டும்’’ என்று உத்தரவு போட்டுள்ளார்.

ஆரம்பம் அமர்க்களம்தான். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link