News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

செந்தில் பாலாஜியை எப்படியாவது ஜெயிலில் அடைக்கவேண்டும் என்று விஜய் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் செந்தில்பாலாஜி உடைத்துக்கொண்டே வருகிறார். இந்த விளையாட்டை முடிக்க விஜய் தயாராக இல்லையாம். இம்மாதம் சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போது அவர் சிறையில் இருக்க வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளதால், மீண்டும் ஒரு முயற்சி நடக்கும் என்கிறார்கள்.

முதலில் சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் பாலாஜி நிவாரணம் பெற்று வருவது, தவெகவின் அரசியல் தாக்குலுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கடுமையான கருத்துக்களைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு துறை உடனடி கைது நடவடிக்கையை மேற்காள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர் குதிரை பேர வழக்கில் முன்ஜாமீன் மற்றும் தற்போது டாஸ்மாக் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் என அடுத்தடுத்த சட்டப் போராட்டங்களில் செந்தில் பாலாஜி நிவாரணம் பெற்று வருவது, தவெக அரசின் அரசியல் தாக்குதல் வியூகங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளது.

செந்தில் பாலாஜியை எப்படியாவது கைது செய்து சிறையில் அடைத்தே ஆக வேண்டுமென விஜய் வேகம் காட்டுகிறார். அதேநேரம், குதிரை பேர வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை கார்த்திக், ரமேஷ் எனும் இருவரை கைது செய்து ரிமாண்ட் செய்துள்ளது அரசு அதிகாரிகள் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை.

கரூரில் விஜய் காலதாமதமாக கலந்துகொண்ட பிரச்சாரத்தில் 41 பேர் இறந்த விவகாரத்தை செந்தில் பாலாஜி சட்டமன்றத்தில் பேசக்கூடாது என்பதுதான் விஜய்க்குப் பயம். அதேபோல்  மின்சாரத்துறையில் தவெக அரசின் மோசமான செயல்பாடு குறித்தும் கேள்வி எழுப்புவார் என்பதாலே விஜய் இப்படி உத்தரவு போட்டுள்ளாராம்.

வேடிக்கை பார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link