Share via:
எம்.ஜி.ஆர் போன்று கர்நாடகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தி
கொஞ்சமாக தண்ணீர் பெற்றுவந்தாலும் ரீல்ஸ் போட்டு இமேஜை அதிகரித்துக்கொள்ளலாம் என்று
விஜய் நினைப்பில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார்.
அதோடு, கர்நாடகாவில் ஜனநாயகன் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே
காவிரி விஷயத்தில் விஜய் அமைதியாக இருந்தார். ஆனால், அதற்கும் பாதிப்பு வந்துவிட்டது.
தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் விஜய்யின் கர்நாடகப் பயணத்துக்கு
எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், விஜய் பிடிவாதமாக இருந்தார். அதற்கு கர்நாடக முதல்வர்
டி.கே.சிவகுமார் ஆப்பு வைக்கும் விதமாக நேற்று பேட்டியளித்தார்.
அவர், ‘’தமிழ்நாடு முதலமைச்சர் தரப்பில் இருந்துதான் பேச்சுவார்த்தை
நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது’’ என்று விஜய் நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டார். மேலும்
அவர், ‘’பல்வேறு விவகாரங்கள் குறித்து எங்களை நேரில் சந்தித்து விவாதிக்க விரும்புவதாக
தமிழக முதல்வரின் அலுவலகத்திலிருந்து எங்கள் தலைமைச் செயலாளருக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அந்தக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி இருவரும் சந்திக்கலாம்
எனத் திட்டமிட்டோம்.
இருப்பினும், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் உத்தரவுகளுக்குப்
பிறகு, தற்போதைய சூழல் அதற்கு உகந்ததாக இல்லை என்று நான் கருதுகிறேன்.
இரு மாநிலங்களுக்கும் இடையே மிகவும் சுமுகமான சூழல் நிலவ வேண்டியது
அவசியம் என்பதால், இந்தச் சந்திப்பை சிறிது காலம் ஒத்திவைக்குமாறு அவரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
மேகேதாட்டு அணைத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது எங்களை விடத் தமிழகத்திற்கே
அதிகப் பலனளிக்கக்கூடியது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்த நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எந்தவொரு உத்தரவையும் மீற நாங்கள் விரும்பவில்லை. எனவே, இரு மாநிலங்களின் நலன் கருதி
அமைதியான மற்றும் சுமுகமான சூழலில் சந்திப்பை மேற்கொள்ளும் வகையில், தமிழக முதல்வரிடம்
இந்தச் சந்திப்பைச் சிறிது காலம் ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம். பதற்றமான
சூழல் நிலவும் நிலையில், தமிழக முதல்வர் கர்நாடகாவுக்கு வந்தால் சரியாக இருக்காது.
தமிழக முதல்வர் கர்நாடகா வரும்போது இங்கே போராட்டங்கள் நடந்தால் நன்றாக இருக்காது”
என்றார்.
இந்த நிலையில் கன்னட அமைப்பினர் தமிழக முதல்வர் விஜய் நடித்து
வெளியாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பெங்களூரு, மண்டியா ஆகிய இடங்களில் ஜனநாயகன் திரையிடப்பட்ட
திரையரங்குகளை முற்றுகையிட்டு, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தனர். கன்னட
அமைப்பினரின் மிரட்டல் காரணமாக கர்நாடகா முழுவதும் 50-க்கும் மேற்பட்ட திரையரங்கங்களில்
ஓடிக் கொண்டிருந்த ஜனநாயகன் படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வசூலும் போச்சு. காவிரி தண்ணியும் போச்சு.