News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

அதிமுகவில் உட்கட்சி பூசல் காரணமாக வெளியேறி திமுகவில் சேர்ந்தவர் தோப்பு வெங்கடாசலம். அதிமுகவிலிருந்து வந்தவர் என்பதால், அவருக்கு பொறுப்பு வழங்க வேண்டும் என்பதற்காக புதிதாக ஈரோடு மத்திய மாவட்டம் என ஒரு மாவட்டத்தை தலைமை உருவாக்கி, மாவட்டப் பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.

ஆனால், இன்று திடீரென ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து தோப்பு வெங்கடாசலம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட பெருந்துறை, பவானி தொகுதிகள் முறையே ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு மாவட்டத்தில் இணைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதற்கான காரணம் குறித்து திமுகவினர், ‘’கட்சியில் சேர்ந்ததில் இருந்தே முத்துசாமிக்கும் தோப்பு வெங்கடாசலத்துக்கும் சரிப்பட்டு வரவில்லை. தற்போது அதிமுகவில் தோப்புக்கு குடைச்சல் கொடுத்த முக்கியப் புள்ளிகள் எல்லாம் விலகி தவெகவுக்குப் போய்விட்டார்கள். அதனால் இப்போது மீண்டும் அதிமுக போய்விடலாம் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதை அறிந்தே கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது’’ என்று சொல்கிறார்கள்.

தோப்பு வெங்கடாசலத்தின் கட்சிப் பறிப்பு அதிமுகவினரை குஷிப்படுத்தியிருக்கிறது. பெருந்துறையில் இடைத்தேர்தல் வருகிறது. அதனால் இப்போது தோப்பு வெங்கடாசலம் கட்சிக்குள் வருவது அதிமுகவுக்கு கூடுதல் பலம் கொடுத்துவிடும். இழந்த தொகுதியை மீட்பதற்கு நல்ல வாய்ப்பு என்கிறார்கள்.

அதேநேரம், தவெகவில் இருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை அறிந்தே திமுக நடவடிக்கை எடுத்துள்ளது என்கிறார்கள்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link