Share via:
த்ரிஷாவை பத்தி தப்பா பேசிவிட்டார் என்று தவெகவினர் கொந்தளித்த
நிலையில், உதயநிதியை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றது போலீஸ்.
இந்த கைது குறித்து பேசிய உதயநிதி, ‘’தவெக அரசு செய்துள்ள கைது
நடவடிக்கையை காமெடியாக தான் பார்க்கிறேன். கையாலாகாத அரசு தனது கையாலாகதனத்தை மறைப்பதற்காக
தன்னை கைது செய்து அனைத்தையும் திசை திருப்பி இருக்கிறது.
நான் பேசாததை வெட்டி ஒட்டி பரப்புகின்றனர். டம்மி முதல்வருக்கு
ரீல்ஸ் வெறி முத்தி போயுள்ளது திமுகவின் கடைசி தொண்டன் கூட இது போன்ற கைது நடவடிக்கைக்கு
பயப்பட மாட்டான்’’ என்று கிண்டல் செய்திருக்கிறார்.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி என்று மனைவி சங்கீதா
பற்றி பேசிய உதயநிதியின் பேச்சுக்கு வராத வழக்கும் கைதும் த்ரிஷாவுக்கு வந்துள்ளது.
ஊழலுக்காக கைது என்றால் அது வேறு, ஆனால் திரிஷாவிற்காக கைது என்றால்
மக்கள் மத்தியில் உதயநிதிக்கு அனுதாபம் தான் வரும். வழக்கு பதிவு செய்யலாம் அத்தோடு
நிற்பது அரசுக்கு நல்லது. அதிகார போதையில் விஜய் அரசு தவறான வழியில் செல்கிறது. ஒரு
விஷயம் தெளிவாக சொல்லப்படுகிறது. த்ரிஷா தான் அடுத்த தலைவி என்று சொல்லப்படுவது உண்மையாகிறது.
அதோடு அரசியல் விமர்சகர்கள், ‘’விஜய்க்கு உதயநிதி மீது ஏதோ தனிப்பட்ட
கோபம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இல்லையென்றால், இந்தக் கைது நடவடிக்கைக்கு
எந்த அவசியமும் இருப்பதாகத் தெரியவில்லை. வெற்றிக்கொண்டன் போன்ற பல மூன்றாந்தர பேச்சாளர்கள்,
உதயநிதி பேசியதைவிட மிகவும் மோசமாகப் பேசியிருக்கிறார்கள். என் பார்வையில், இந்தக்
கைது மூலம் உதயநிதியை ஒரு தியாகி போல மக்கள் மத்தியில் காட்டி, அவருக்கே ஒரு அரசியல்
வாழ்க்கையை உருவாக்கிக் கொடுக்கப் போகிறார்கள்.
அவ்வளவுதான் இதுவரை அவர் திமுகவில் முன்னிலைப் படுத்தப்பட்டதற்கு
ஒரே காரணம், அவர் கலைஞர் கருணாநிதியின் பேரன், ஸ்டாலினின் பையன் என்பதுதான். அதைத்
தவிர, அவரைத் தலைவராக முன்னிறுத்தும் அளவுக்கு தனிப்பட்ட தகுதி என்ன அவருக்கு இருக்கிறது?’’
என்று கேள்வி கேட்கிறார்கள்.
உதயநிதி கைதுக்கு பிரேமலதா மட்டுமே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, தமிழ்நாடு முழுக்க திமுகவினர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கம்னு இல்லாம இப்படி உசுப்பேத்திவிட்டாரே விஜய்.