News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திமுக ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வேங்கைவயலில் நடைபெற்ற குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவத்துக்கு இணையாக திண்டுக்கல் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தேறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ‘’திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்கள் பருகும் குடிநீர் தொட்டிக்குள் மனித மலக்கழிவு கண்டெடுக்கப்பட்ட செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன். கல்வி கற்கும் ஆலயத்தில், பிஞ்சு குழந்தைகளின் உயிருடன் விளையாடும் இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை எவர் செய்திருந்தாலும் அதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் வடு மறைவதற்கு முன்னரே, மீண்டும் ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது. அரசுப் பள்ளிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததே இதற்கு மிக முக்கிய காரணமாகும். எனவே இனியாவது தவெக அமைச்சர்கள் கேமராக்களுடன் பள்ளிகளில் ‘ஆய்வு நாடகம்’ நடத்துவதை விடுத்து, மாணவர்களின் பாதுகாப்புக்கு உருப்படியான (உறுதியான) தீர்வை வழங்க வேண்டும்.

மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிந்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளி குடிநீர் தொட்டிகளையும் முறையாகப் பரிசோதித்து, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அய்யலூர் அருகே உள்ள தங்கமாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குடிநீர்த் தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மலக்கழிவுகள் கிடந்துள்ளன.

மேலும் அந்தக் கவருக்குள் எச்சரிக்கை துண்டு சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்தத் துண்டு சீட்டில், ‘எங்களுடைய குடியிருப்புகளை அழித்தவர்களுக்கு எச்சரிக்கை’ என்ற வாசகங்கள் எழுதியிருந்தது.

இந்த உயர்நிலைப்பள்ளி உள்ள இடத்தில் இதற்கு முன்பு 13 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாகக் குடியிருந்த வந்தனர். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கும்போது அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு வேறு இடம் கொடுக்கப்பட்ட நிலையில் நான்கு குடும்பங்களுக்கு மட்டும் இடம் கொடுக்கபடாததால் பள்ளிக்கு அருகிலேயே குடியிருந்து வருகின்றனர்.

தற்போது பள்ளியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி வருவதால், அந்தக் குடும்பங்கள் வெளியே சென்று வர வழியில்லை என்பதால் தங்களுக்கு அரசு சார்பில் மாற்று இடம் வழங்கபட வேண்டுமென இரண்டு ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். இந்த சீட்டில், ‘எங்களுடைய குடியை கெடுத்தவர்களுக்கு எச்சரிக்கை’ என்ற வாசகங்கள்தான் எழுதப்பட்டிருக்கிறது. இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்றனர்

அந்த குடும்பத்தினரின் பிள்ளைகளும் அதே பள்ளியில் படிப்பதால் நாங்கள் செய்யவில்லை, எங்களை காலி செய்யவைப்பதற்காக ஆசிரியர்கள் செய்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இதிலாவது உண்மை வெளியே வரட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link