Share via:
விஜய் பாணியில் அடுத்து தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்பது
கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்காக கல்வி சேவையைத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.
சென்னை சாலிகிராமம் 80 அடி சாலையில் அமைந்துள்ளது, தாய் சத்யா
மெட்ரிகுலேஷன் பள்ளி. இங்கு சாதாரண மேற்கூரை அமைக்கப்பட்டு இருந்த கட்டிடம் ஒன்றை அகற்றிவிட்டு,
அதற்கு பதிலாக மூன்று தளங்கள் கொண்ட கான்கிரீட் கட்டிடம் ஒன்றை தனுஷ் தனது சொந்த செலவில்
கட்டிக் கொடுத்திருக்கும் சம்பவம் அவரது அரசியல் வருகைக்கு அடித்தளம் என்கிறார்கள்.
அந்த கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு வரையிலான தனது பள்ளிப் படிப்பு முழுவதையும் தனுஷ் இந்தப் பள்ளியில்தான்
படித்தார். இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் தனுஷ், அவருடன் படித்த ஒளிப்பதிவாளர் குமரன்
மற்றும் 1999 பேட்ச் மாணவர்கள் மற்றும் தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி, விமலகீதா
கலந்துகொண்டனர்.
தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் கால்களிலும் விழுந்து ஆசி பெற்ற
தனுஷ், அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த பள்ளியின் கட்டிட நிலை பற்றி தனுஷ்
கேட்டறிந்து, தானாகவே முன்வந்து இந்த உதவியை செய்துள்ளாராம். அதோடு, இன்னும் பிற கட்டிடங்களை
சீரமைத்தும், காலி இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டித் தருவதாகவும் வாக்கு கொடுத்திருக்கிறாராம்.
கமான் புரோ