News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஷாப்பிங் செல்வதற்கு இப்போது யாரும் பர்ஸ் எடுத்துச் செல்வதில்லை. யுபிஐ ஸ்கேனர் என்று பெட்டி கடை வரை வந்துவிட்டது. எனவே, எல்லோரும் ஸ்கேன் செய்து பணம் போட்டுவிடுகிறார்கள்.

இப்போது வணிகர்களும், வாடிக்கையாளர்களும் எந்த  கட்டணமும் இல்லாமல் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனைகள் பல மடங்கு அதிகரித்துள்ளதால் வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண சேவை வழங்கும் நிறுவனங்களின் செலவுகள், சர்வர் பராமரிப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கான நிதி கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று இந்த நிறுவனங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தின. இதையடுத்து, 2000 ரூபாய்க்கு மேற்பட்ட யுபிஐ வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு 0.25 சதவீதம் முதல் 0.35 சதவீதம் வரை எம்டிஆர் கட்டணத்தை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. சட்டத் திருத்த மசோதா இதற்கான சட்டத் திருத்த மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதேநேரம், சிறு மற்றும் குறு வணிக நிறுவனங்கள், சிறிய வர்த்தகர்கள் ஆகியோருக்கு இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து விலக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது பொதுமக்கள் தங்களுக்கு ஒருவருக்கொருவர் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளுக்கு இந்த கட்டணம் இல்லை என்றாலும், கண்டிப்பாக விரைவில் அதுவும் வந்துவிடும் என்கிறார்கள்.

இதையடுத்து கம்யூனிஸ்ட் பெ.சண்முகம், ‘’”எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள்; வங்கிகளுக்கு அலைய வேண்டாம்” என்றார் பிரதமர். தொடர்ந்து விளம்பரம் செய்து கொண்டே இருந்தார். பொதுமக்கள் மீதான அக்கறை என்று கருதினோம். இப்போது, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது ஒன்றிய அரசு. மோடி எதைச் சொன்னாலும் அதில் மக்கள் நலன் கடுகளவும் இருக்காது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கட்டணம் என்ற யோசனையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்’’ என்று கேட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link