News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

முதன்முறையாக உதயநிதி கேள்விக்குப் பதில் சொல்கிறோம் என்று விஜய் பேசியது, அவருக்கே பேக் ஃபயர் ஆகியிருக்கிறது.

குறுவை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஏன் சிறப்பு நிவாரணத் தொகை அறிவிக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஏற்கனவே அறிவித்து விட்டோம் நாங்கள்தான் அரசியல் என சொல்லக்கூடியவர்கள் ஏன் இதை தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் பேப்பர் படித்தாலே இதையெல்லாம் தெரிந்து கொண்டிருக்க முடியும் என முதல்வர் விஜய் பதில் கூறினார்.

உடனே உதயநிதி, ‘’நீங்கள் அறிவித்திருக்கக்கூடிய சிறப்பு நிவாரணத் தொகை என்பது எல்லா அரசுகளும் அறிவிக்கக்கூடியது தான் ஆனால் தற்பொழுது ஏற்பட்டிருப்பது கடுமையான வறட்சி அதற்கு ஏன் தனியாக விவசாயிகள் பலனடையும் நிதி உதவி அறிவிக்கவில்லை என்பதுதான் கேள்வி இதையெல்லாம் பேப்பர் படித்தால் மட்டும் தெரிந்து கொள்ள முடியாது அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைத்து விவசாய சங்கங்களுடன் ஆலோசித்தால் தான் தெரிந்து கொள்ள முடியும்’’ என்று பதிலடி கொடுத்தார்.

காவிரி நீருக்கு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர 4 காரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் கூறியிருக்கிறார். மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை தடுக்க இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என இந்த அவைக்கு தெரிவிக்க வேண்டும். 2வது காரணம். முழு பயிர் கடன் தள்ளுபடி என தேர்தலின் போது வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அரைகுறை தள்ளுபடியை மட்டும் செய்வது ஏன்? 3வது காரணம், காவிரியில் தண்ணீர் வராததினால் குறுவை சாகுபடி மொத்தமாக இல்லாமல் போய்விட்டது. இதற்கு தகுந்த நிவாரணத் தொகையை எப்போது இந்த அரசு விவசாயிகளுக்கு கொடுக்கப் போகிறது. 4வது காரணம் டெல்டா மாவட்டங்களில் வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்து அங்குள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை இந்த அரசு கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

இதை சமாளிக்கும் வகையில், ‘’இந்த வறட்சியை மொத்தமாக கணக்கெடுத்து செப்டம்பர் மாதம் தான் அறிவிப்போம்’’ என அமைச்சர் செங்கோட்டையன் பதில் கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியும், ‘’மேகதாது விவகாரத்தில் புதிய காவிரி நடுவர் மன்றம் அமைப்பதை அதிமுக ஏற்கவில்லை காவிரி நீர் தொடர்பாக முதலமைச்சர் வாய் திறந்து பேசமாட்டேன் என்கிறார். கர்நாடகாவில் கூட்டியது போன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’’ என்று விஜய்க்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

உதயநிதி பேச்சை சமாளிக்க முதல்வர் விஜய், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோருடன் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் எழுந்து பதிலளித்துவருகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link