News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

திருவண்ணாமலைக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசிய நிலையில், அவரது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாலே எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து அதிமுகவுக்கு இடைஞ்சல் செய்துகொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது தங்களை அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கிவிட்டால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக தொடரலாம் என்று ஆசைப்படுகிறார்கள். கட்சியில் இருந்து நீக்கவில்லை என்றால் பழைய பதவி வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

எனவே, தினமும் ஒரு தகவல் பேசுகிறார்கள். திமுகதான் எதிரி என்றால் தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில் என்ன தவறு என்று சி.வி.சண்முகம் கேட்கிறார். எஸ்.பி.வேலுமணி இன்னும் ஒரு படி மேலே போய் கட்சிக்குள் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சேர்க்கவேண்டும் என்று சொல்கிறார்.

ஆனால், எடப்பாடி இவர்களை கட்சியில் இருந்து நீக்குவதற்குத் தயாராக இல்லை, அதேபோல் பழைய பதவியையும் கொடுக்க விரும்பவில்லை. இந்த நிலையில் அமித்ஷாவுடன் சந்திப்பு நடந்துள்ளது.

அதிமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகத்துக்கு ஆதரவு தரவேண்டாம் என்று அமித்ஷாவிடம் எடப்பாடி வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

அதற்கு அமித்ஷா, ‘ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் விஷயத்தில் எப்படி நீங்களாக முடிவு எடுத்தீர்களோ, அதேபோல் இப்போதும் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள். எங்களுக்கு எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அப்போதுதான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கும்’’ என்று அனுப்பியிருக்கிறார்.

இதனால் எடப்பாடி செம அப்செட் ஆகியுள்ளார். எடப்பாடி ஆதரவாளர்கள், ‘நமக்கு இனிமேல் பாஜக வேண்டாம், அதை விட்டு வெளியே வந்தாலே ஜெயித்துவிடலாம்’ என்று குரல் கொடுக்கிறார்கள். வழக்கம் போல் விஷயத்தை ஆறப்போட்டு வேடிக்கை பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link