Share via:
அது ஒரு காலம். சோஷியல் மீடியாவில் எப்போதும் அண்ணாமலை பற்றியே
பேச்சாக இருந்தது. விஜய் வந்தபிறகு அந்த நிலை மாறிவிட்டது. தினமும் அண்ணாமலை பேசுகிறார்
என்றாலும், அதை கேட்கத்தான் ஆட்கள் இல்லை. இந்த நிலையில் தனிக் கட்சி தொடங்குவது தள்ளிப்போவதாகத்
தெரிகிறது.
பாஜகவில் இருந்து வெளியேறிய அண்ணாமலை, “வீ த லீடர்ஸ்” என்ற புதிய
அமைப்பை தொடங்கி அதை அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான திட்டத்தில் இருந்தார். அமைப்பு
தொடங்கிய முதல் நாளிலேயே 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.
ஆகவே, 50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் இந்த அமைப்பை கட்சியை
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டு மாதங்கள்
கடந்தும் இந்த அமைப்பின் எண்ணிக்கை சுமார் 20 லட்சம் அளவிலேயே உள்ளது.
இதற்கு பதிவு செய்வதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்பட்டதால் மாவட்ட
அளவில் முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனாலும் உறுப்பினர் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் தெரியவில்லை.
அதனால் பாஜக பாணியில் மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை எளிதாக்கலாமா என்று
நிர்வாகிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
ஆனால், இந்த வரவேற்பு அண்ணாமலையை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டதாம்.
இந்த எண்ணிக்கையை வைத்துக்கொண்டு எப்படி கட்சி ஆரம்பிப்பது என்று யோசிக்கிறார். மீண்டும்
லண்டனுக்குப் படிக்கப் போய்விட்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திரும்பலாமா என்று
யோசிக்கிறாராம்.