News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் ஆட்சியில் காவல் துறையின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளன. அதனால், ஊழல், லஞ்சத்துக்கு எதிராக காவல் துறை அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஏற்கெனவே பொதுமக்கள் லஞ்சப் புகார்களை ‘7871723000’ என்ற எண்ணில் வாட்ஸ்அப் அல்லது நேரடியாகத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்  சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது

இந்நிலையில் காவல் துறையினருக்கும் அதிகாரிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை காவல் ஆணையர் அமல்ராஜ் வழங்கியுள்ளார். அதில் அவர், ‘’எந்தவொரு சூழலிலும் நான் லஞ்சம் வாங்க மாட்டேன். அதேபோல காவல் துறையில் யார் லஞ் சம் வாங்கினாலும் அவர்களை தப்ப விடமாட்டேன். காவலர்கள் யாரும் உயர் அதிகாரிகளைக் குளிரவிக்கப் பணம் செலவு செய்யத் தேவையில்லை. எனக்காகவும் யாரும் எந்தவிதத் தேவையில்லாத செலவுகளையும் செய்ய வேண்டாம்.

காவல் நிலையத்துக்குப் புகாருடன் வருபவர்களின் மனுவில் உள்ள உண்மைத் தன்மையை மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, அவர்களின் பின்னணியையோ, பண பலத்தையோபார்க்கக் கூடாது. நமக்குக் கொடுத்த பணியை நேர்மையாகச் செய்வோம். தவறு செய்பவர்களுக்கு நான் ஒருபோதும் துணை நிற்கமாட்டேன். நேர்மையாகப் பணியாற்றுங்கள்’’ என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில், டிஜிபி பாலநாக தேவி உட்பட 10 போலீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்துறை செயலர் கே.மணிவாசன் உத்தரவுப்படி, மாநில சைபர் க்ரைம் பிரிவு டிஜிபி-யாக இருந்த பி.பால நாக தேவி சிபிசிஐடி டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த அபின் தினேஷ் மோடக் மாநில சைபர் க்ரைம் கூடுதல் டிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த கூடுதல் டிஜிபி வித்யா ஜெயந்த் குல்கர்னி பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதேபோல், சென்னை காவல் நுண்ணறிவு பிரிவு (2) துணை ஆணையர் எம்.ராமமூர்த்தி க்யூ பிரிவு சிஐடி எஸ்பி-யாக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த பி.கே.அரவிந்த் சென்னை எஸ்பிசிஐடி பிரிவு (1) எஸ்பி-யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சென்னை வடக்கு மண்டல சிபிசிஐடி எஸ்.பி அர்பிதா ராஜ்புட் சென்னை அண்ணா நகர் காவல் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அங்கிருந்த துணை ஆணையர் ஈஸ்வரன் சென்னையில் உள்ள தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த எஸ்.ஆர்.செந்தில் குமார் நாகப்பட்டினம், கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளர்.

சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி வி.சரவண குமார் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பியாகவும், அங்கிருந்த எஸ்.பி டி.ரமேஷ் பாபு திருநெல்வேலி சிட்டி தலைமையிட துணை ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

இன்னொரு மாற்றமாக ஆன்டி நார்கோடிக்ஸ் ஃபோர்ஸ் முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் போதைப் பொருளை ஒழிக்க சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுக்கு போதை பொருள் தொடர்பான தகவல்களை காவல்துறை தெரிவிக்க வாட்ஸ் அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் போதை மாத்திரைகள் விற்பனை, பதுக்கல், கடத்தல் பயன்பாடு மற்றும் இதர போதை பொருட்கள் தொடர்பான அனைத்து புகார்களையும் பொதுமக்கள் தெரிவிக்கலாம். ரகசியம் பாதிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதிரடி மாற்றங்கள் நல்ல விளைவுகளைக் கொடுக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link