Share via:
கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணை அடிப்படையிலான
பணி நியமனங்களை ரத்து செய்த மதுரை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, இன்று உச்ச நீதிமன்றம்
இடைக்காலத் தடை விதித்துள்ளது. இது விஜய்க்கு பெருத்த ரிலாக்ஸ் என்று கருதப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடந்த விஜய் மக்கள் சந்திப்பு
நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம்
தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் பலியான 31
பேரிர் குடும்பத்தினருக்கு முதல்வர் விஜய் அரசு வேலை உத்தரவை நேரில் வழங்கி இருந்தார்.
இதற்கு நாம் தமிழர் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
தொடுத்தனர். இந்த
விசாரணையின் முடிவில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு
அரசு பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
அரசு நினைத்தால் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு திறன்
பயிற்சி வழங்கி வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சிக்கலாம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு
சாதாரண பணி தான் வழங்கியதாக கூறுவதை ஏற்க முடியாது. எனவே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது
என உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்துக்கு விஜய் அரசு கொண்டுசென்றது. இன்று நடைபெற்ற விசாரணையை
அடுத்து, அரசாணை ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘’ஒரு குடும்பத்தில் வேலை பார்க்கும்
நபர் இறந்து விட்டால் அந்த குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க கூடாதா? ஒரு பெரும் துயர
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்குகிறது இதில் உங்களுக்கு
என்ன பிரச்சனை என எதிர்மனுதாரர்களுக்கு நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
இதில் அரசியலை புகுத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவுரை கூறியிருக்கிறது.
இதற்கு பதிலளிக்க எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.