News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் இருந்தே தலைமைச் செயலகத்தை மாற்றும் முயற்சி நடந்துவருகின்றன. குயீன் மேரீஸ் கல்லூரியை ஜெயலலிதா மாற்ற நினைத்தார். அண்ணா சாலையில் கருணாநிதி அமைத்தார். ஸ்டாலினும் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், விஜய் காலத்தில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல் நடவடிக்கையாக முதல்வர் அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்படும் பணி தொடங்குகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் ஜார்ஜ் கோட்டையில் இருந்து நாமக்கல் கவிஞர் மாளிகை பத்தாவது மாடிக்கு முதல்வர் விஜய் அலுவலகம் மாற்றப்படுகிறது.

இதற்கான பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக ஐந்து கோடி செலவில் பொதுப்பணித்துறை சார்பில் குறுகிய கால டெண்டர் விடப்பட்டுள்ளது. இப்பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பட்டினப்பாக்கத்தில் முதல்வர் விஜய் வீடு அருகே தலைமைச்செயலகம் அமைப்பதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பட்டினப்பாக்கம் பகுதியில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வுப் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இது விஜய்யின் அன்றாடப் பயண நேரத்தையும், அதற்காகச் செய்யப்படும் போக்குவரத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெருமளவில் குறைக்கும்.

இப்போது விஜய் தினமும் நீலாங்கரையில் இருண்டு வந்துசெல்லும்  கான்வாய் வாகன அணிவகுப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதை தவிர்ப்பதற்கும், மிக எளிமையான முறையில் தலைமைச் செயலகத்திற்குச் சென்று வருவதற்கும் இந்த இடம் மிகவும் பொருத்தமாக இருக்கும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதியும் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டியே அமைந்துள்ளதால், அங்கிருந்து விரிந்த கடலின் இயற்கை அழகை முழுமையாகக் கண்டு ரசிக்க முடியும். கடலுக்கு மிக அருகே, அமைதியான சூழலில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் அமைந்தால், அது நிர்வாகப் பணிகளுக்கு இடையே முதல்வருக்கு மிகுந்த மனநிறைவையும் புத்துணர்ச்சியையும் தரும் என்பதால், அதிகாரிகள் இந்த இடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். முதல்வரின் அனுமதி கிடைத்தவுடன், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான அரசாணை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீக்கிரம் நடக்கட்டும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link