Share via:
விடுதலை சிறுத்தைகள் புதிய இயக்கம் அல்ல, நிறைய கூட்டங்களை வெற்றிகரமாக
நடத்தியவர்கள். ஆனால், தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டை ஒழுங்காக திட்டமிடாத காரணத்தால்
கட்டுக்கடங்காத கூட்டம் காட்டுமிராண்டித்தனமாக மாறியது. வேறு வழியில்லாமல் தொண்டர்களை
கட்டுப்படுத்த திருமாவே களத்தில் இறங்கி அடித்து, தள்ளவேண்டி இருந்தது.
ஒரு கூட்டத்தை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு உதாரணமாக விசிக
தேசிய எழுச்சி மாநாட்டைக் கூறலாம் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. இதுகுறித்து பேசும் விசிகவினர்,
‘’நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான கூட்டம் அதாவது ஏறக்குறைய 10 லட்சத்திற்கு அதிகமான
தொண்டர்கள் திரண்டார்கள். அதனால்தான் தலைவர் எந்த வகையான அசம்பாவிதம் நடக்காமல் இருக்க
மூன்றே தீர்மானத்தை படித்து குறைந்த அளவு நேரத்தில் பேசி மாநாட்டை முடித்துக்கொண்டார்.
பல லட்சம் பேர் மாநாடு உள்ளேயே நுழைய முடியவில்லை. அவர்களும் உள்ளே
நுழைந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்றே தெரியவில்லை. அதனால் சீக்கிரம் பேசி முடித்து
எல்லோரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்’’ என்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவுடன் இந்த தேர்தல் மட்டுமின்றி
அடுத்துவரும் தேர்தல்களிலும் இணைந்தே பயணிப்போம் என்று உறுதி கொடுத்த திருமாவளவன்,
’’இனிவரும் தேர்தல்களில் தவெகவுடன் இணைந்து பயணிப்போம்” என்று அறிவித்துவிட்டார்.
அதேநேரம், இந்த மாநாடு விசிக மீது முகச்சுளிப்பை ஏற்படுத்திவிட்டது.
தஞ்சையில் விசிக பேனர்கள் அகற்றப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது
இடையே சென்ற இளைஞர் ஒருவர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் செய்த இளைஞரை காவல்துறை அதிகாரிகன்னத்தில் அறைந்த நிலையில், இளைஞரும் திருப்பி
கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவர் மீது
அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொ*ல மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுகவில் இருந்து அபீஷியலாக விடுதலை சிறுத்தைகள் வெளியேறியிருக்கிறது.
அதனால் உடன்பிறப்புகள் சமூகவலைதளத்தில் அடித்து வெளுக்கிறார்கள்.