Share via:
எதிர்பாராத தோல்வியினால் துவண்டு போயிருக்கும் திமுகவுக்கு உற்சாகம்
தரும் வகையில் உட்கட்சித் தேர்தல் மற்றும் சீரமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்டச் செய்லாளர்கள் எண்ணிக்கை நூறுக்கும் மேல் உயர்த்தப்பட உள்ளது. இதில், உதயநிதி
ஆதரவாளர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சீனியர்கள் அலறுகிறார்கள்.
இதுகுறித்துப் பேசும் திமுகவினர், ‘’விரைவில் திமுக செயற்குழு
குழுவை கூட்ட திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. இதில் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு
அலங்காரப் பதவிகள் மட்டுமே இருக்கும். சென்னையில் பகுதி செயலாளர்கள், பிற மாவட்டங்களில்
ஒன்றிய செயலாளர்களின் அதிகபட்ச வயது 50 கிளைச்செயலாளர்களின் அதிகபட்ச வயது 40 என்றும்
நிர்ணயிக்கப்பட இருக்கிறது. புதிய நிர்வாகிகளில் ஆதி திராவிடருக்கு 30%; பெண்களுக்கு
10% ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
கிளை கழகம் முதல் மாவட்ட செயலாளர்கள் நியமனம் வரை செயற்குழு கூட்டத்தைக்
கூட்டி தீர்மானம் நிறைவேற்றி முதலில் பொறுப்பாளரை அறிவித்து விடலாம். அதன் பின்பு கழக
தேர்தலை நடத்தி பொறுப்பிற்கும் ஆட்களை தேர்வு செய்யலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
10 பாகங்களுக்கு ஒரு கிளைச் செயலாளர் எனவும் 40 ஆயிரம் பேருக்கு
ஒரு வட்டச் செயலாளர் எனவும், ஒரு தொகுதிக்கு மூன்று பகுதி செயலாளர் எனவும் இரண்டு சட்டமன்றத்திற்கு
ஒரு மாவட்ட செயலாளர் எனவும் பிரித்திருக்கிறார்களாம். 100 முதல் 120 மாவட்டச் செயலாளர்களை
நியமிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர்.
இதில் சென்னை மாவட்டத்தில் புதிதாக மாவட்டச் செயலாளர்களை நியமித்திருக்கிறார்கள்
என தகவல். சேகர்பாபு எதிர்த்து அரசியல் செய்த பரந்தாமனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு
கொடுக்கப்பட இருக்கிறது. மா சுப்பிரமணியன் எதிர்த்து அரசியல் செய்த கேகே நகர் தனசேகருக்கு
மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறது. அண்ணா நகர் எம் கே மோகன் அவர்களின்
மகன் கார்த்திக் அவருக்கு மாவட்ட செயலாளர் கொடுக்கப்பட இருக்கிறது. சோழிங்கநல்லூர்
முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அவர்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட இருக்கிறது
என்கிறார்கள்.
ஸ்டாலினுக்கு ஆதரவான சீனியர்களுக்குக் கல்தா கொடுத்து, தன்னுடைய
ஆதரவாளர்களை நியமிக்க இருக்கிறார் உதயநிதி. ஆகவே, திமுகவில் உதயநிதி காலம் உருவாகிறது.