News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

விஜய் ஆட்சியின் 100 நாள் சாதனைகள் மற்றும் சுதந்திர தின நாள் கொண்டாட்டத்திற்கு திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, விஜய்யின் அதிரடி அரசியலை ஸ்டாலினால் தாக்குப்பிடிக்க முடியாமல் தனிமனித தாக்குதல் மற்றும் நடிகை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளதுள்ளார் என்று தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

முரசொலி தலையங்கத்தில், ‘’சுதந்­திர தினத்­தன்று கொடி ஏற்­றிய முத­ல­மைச்­சர் விஜய்­யின் மானம் காற்­றில் பறந்­தது. வெட்­கமோ, கூச்­சமோ இல்­லா­மல் ஒரு நடிகையை முன்­வ­ரி­சை­யில் உட்­கார வைத்து, இரு­வ­ரும் மாறி மாறி சல்­யூட் வைத்துள்ள காட்­சியை அவ­ருக்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளா­லேயே சகிக்க முடி­ய­வில்லை. அசிங்­கத்­தை­யும் அரு­வ­ருப்­பை­யும் பட்­ட­வர்த்­த­ன­மா­கச் செய்­வ­தன்­மூ­ல­மாக அதனை நியா­யப்­ப­டுத்த நினைக்­கி­ற­வர் ­தான் இன்று தமிழ்­நாட்­டுக்கு முத­ல­மைச்­ச­ராக வந்துள்ளார்.

மூன்றே மாதங்­க­ளில் அவ­ருக்கு தனது செல்­வாக்கு நிலைக்­குமா, பதவி நிலைக்­குமா என்ற பயம் வந்­து­விட்­டது. அதை­யும் அவர் உரையே காட்­டிக் கொடுத்­து­விட்­டது.

கொடி ஏற்­றி­விட்டு முத­ல­மைச்­சர் விஜய் பேசு­கி­றார்.

“எல்­லோ­ரும் வாக்­க­ளித்து விட்டோம், விஜய்யை ஜெயிக்க வைத்து முத­ல­மைச்­சர் ஆக்­கி­விட்­டோம், எனவே கட­மை­யெல்­லாம் முடிந்து விட்­டது என்று யாரும் ஒதுங்கிப் போய்­வி­டா­தீர்­கள். இனி நீங்­கள் நம்­மு­டனே, அர­சு­டனே இருக்க வேண்­டும். அப்­போ­து­தான் உங்­க­ளுக்­காக இருக்­கிற அனைத்து நல்ல திட்­டங்­க­ளை­யும் என்­னால் செயல்­ப­டுத்த முடி­யும்” என்று அழுது புலம்பி இருக்­கி­றார்.

இந்­தப் புலம்­ப­லுக்கு, இந்த அழு­கைக்கு என்ன கார­ணம்? அவரை நம்பி வாக்­க­ளித்­த­வர்­கள், ‘தவறு செய்­து­விட்­டோம்’ என்று வருந்­திக் கொண்டு இருக்­கி­றார்­கள். 10 வயது சிறுமி கோவை­யில் பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு ஆளாக்­கப்­பட்­டுச் சிதைக்­கப்­பட்­ட­போது அதை மறைக்க நினைத்­தது விஜய் அரசு. ‘நீங்க ஆ­க்ஷன் ஹீரோ… தப்பு நடந்தா நட­வ­டிக்கை எடுப்­பீங்­கன்னு நினைச்சு தானே வாக்­க­ளித்­தோம்’ என்று ஒரு பெண் கத­றி­னாரே. இப்­படி பல பேரும் கத­றிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.

தனது படத்­தைத் தயா­ரித்த சினிமா தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மகு­டம் சூட்­டிக் கொண்டு இருக்­கி­றார் விஜய். ஜன­நா­ய­கன் படத்­தைத் தயா­ரித்த வெங்­கட நாரா­யணா தமிழ் நாடு அர­சின் டெல்லி சிறப்­புப் பிர­தி­நி­தி­யாம். ‘பிகில்’, ‘கோட்’ படத்தை தயா­ரித்த அர்ச்­சனா கல்­பாத்தி கோவில்­க­ளுக்­கான அறங்­கா­வ­லர்­க­ளைத் தேர்வு செய்­யப் போகி­றா­ராம். ‘லியோ’ படத்­தைத் தயா­ரித்த ஜெக­தீஷ் பழ­னி­சா­மி­தான் முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­லா­ளர். தனது ஜோசி­ய­ருக்கு மகு­டம். தேர்­த­லுக்கு முன்­ன­தாக தனக்கு செலவு செய்­த­வ­ருக்கு பதவி. இது­தான் நடக்­கி­றது. இதை எல்­லாம் தலை­யாட்டி ஏற்­றுக் கொள்­வார்­கள் மக்­கள் என்று நினைக்­கி­றாரா விஜய்?

‘விஜய் நன்­றாக டான்ஸ் ஆடு­வார்’ என்­ப­தற்­காக ஏறிய மின்­சா­ரக் கட்­ட­ணத்தை ஏற்­றுக் கொள்­வார்­களா மக்­கள்? ‘விஜய் அழ­கா­கச் சிரிக்­­கிறார்’ என்­ப­தற்­காக ‘சொத்து வரியை எவ்­வ­ளவு வேண்­டு­மா­னால் போட்­டுக் கொள்­ளுங்­கள்’ என்று சொல்லி விடு­வார்­களா தமிழ்­நாட்டு மக்­கள்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.

அரசியல் ரீதியாக தாக்குதல் நடத்தாமல் தனிமனித தாக்குதலில் திமுக இறங்கியிருப்பது, அவர்களுடைய இயலாமையைக் காட்டுகிறது. பயந்துட்டீங்களா ஸ்டாலின் என்று தவெகவினர் குரல் எழுப்புகிறார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link