News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

கர்நாடக வனத்துறையினர் 3 தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரம் மற்றும் காவிரி நீர் பிரச்னை குறித்தும் சென்னைக்கு வரும் கர்நாடக முதல்வருடன் நேரில் எதிர்ப்பு தெரிவிப்பாரா விஜய் என்ற கேள்வி எழுந்துள்ளது.

சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹன்னூர் காட்டில் மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூன்று தமிழர்கள் கர்நாடக வனத்துறை காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதேநேரம், காணாமல் போன மாடுகளைத் தேடிச் சென்றவர்களை வனத்துறை காவலர்கள் சுட்டுவிட்டதாக தமிழர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து கர்நாடக முதல்வரிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘எங்கள் மாநில விவகாரம் குறித்து யாரும் பேசத் தேவையில்லை’ என்ற் தெனாவெட்டாகப் பேசியிருக்கிறார். இந்த நிலையில், தென் மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நாளையும், நாளை மறு நாளும் சென்னையை அடுத்த கோவளத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை தலைமை தாங்கும் இந்த கூட்டத்துக்கு அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் டி. கே. சிவகுமார், கேரள முதலமைச்சர் வி. டி. சதீசன் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி ஆகியோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த மாநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீடு, எல்லைப் பிரச்சினைகள் மற்றும் சட்டம் – ஒழுங்கு சார்ந்த சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

இந்த மாநாட்டிற்கு வருகை தரும் டி.கே. சிவகுமார், தமிழக முதலமைச்சர் விஜய்யை வரும் வியாழக்கிழமை மாலை சென்னையில் நேரில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் மூன்று தமிழர்கள் கொலை குறித்தும், காவிரி நீர் பங்கீடு குறித்தும் நேரில் தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பார் என்று தவெகவினர் கூறிவருகிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. காவிரி ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கான நீரை கர்நாடக அரசு திறக்கவேண்டும். அதேபோல் தமிழர்கள் படுகொலைக்கு நீதி வேண்டும் என்பதை விஜய் தட்டிக் கேட்பார். நியாயம் கிடைக்கட்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link