News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

ராகுல் காந்தி கூட்டத்தில் கலந்துகொள்வதற்குத் தடை விதிக்கப்பட்ட தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அதை மறைப்பதற்காக வருமான வரித்துறை மீது பொய்யான புகார் ஒன்றை வீசினார். அதுவே, பூமராங் ஆக மாறி அவரை ஜெயிலுக்கு அனுப்பப்போகிறது என்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை செய்தநிலையில் அங்கு செல்ல முடியாத வகையில் தன்னை வருமான வரித்துறையினர் சட்டவிரோதமாக அடைத்துவிட்டதாகக் கூறியிருந்தார். அதோடு தனது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை செய்ததாகவும் வீட்டில் இருந்த பொருட்களை தாறுமாறாக கையாண்டதாகவும் கூறியிருந்தார்.

இவர் சொன்னதை நம்பி, ஸ்டாலின் முதலான கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

ஆனால், செல்வப்பெருந்தகையின் குற்றச்சாட்டு பொய்யானது என்று தெரியவந்துள்ளது. எனவே, செல்வப்பெருந்தகைக்கு எதிராக, அவரது நகர்வுகளை கட்டுப்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள வருமானவரித்துறை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்த இடமும் வருமான வரித்துறை சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடத்தப்பட்ட சோதனைகள், கணக்கில் இல்லாத பணம் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் செய்யப்பட்ட வழக்கமான சரிபார்ப்புகள் மட்டுமே என்றும் செல்வப்பெருந்தகை தவறான தகவல் பரப்பியதாக, தேர்தல் ஆணையத்திலும் சென்னை காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது

தேர்தல் முடிந்ததும் இந்த விவகாரம் பெரிதாகக் கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link