Share via:
பாரதப்பிரதமர் மோடியின் மதுரை விசிட் நடந்து முடிந்ததும் தேசிய
ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு குறித்து பேசப்பட்டது. மதுரை கூட்டத்தில்
பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் இன்று டெல்லிக்குப் போகும் எடப்பாடி பழனிசாமி மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசுகிறார்.
இன்றைய தினம் பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்
குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து 4ம் தேதி மாவட்டச் செயலாளர்கள்
கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, மார்ச் 6ம் தேதி தொகுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு
வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அதேநேரம், திமுகவிற்கு உதவும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல்
அமித் ஷா விடம் இன்று இபிஎஸ் ஒப்படைக்கிறார். தேர்தல் அறிவிப்பு வந்ததும் இந்த அதிகாரிகள்
மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
அதேபோல் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவு
இருந்தபோதும் அமைச்சர்கள் கே என் நேரு செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தற்போது வரை
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தேர்தலுக்குள் இவர்கள் இருவர் மீதான நடவடிக்கையை
தீவிரப்படுத்த வலியுறுத்துகிறார். அதாவது, தேர்தலுக்கு இவர்கள் இருவரும் வெளியே இருக்கக்கூடாது
என்பதுதான் இபிஎஸ் விருப்பம்.
இந்த நிலையில், தொகுதிப்பங்கீடு குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி அதிமுக – 162, பாஜக – 30, அன்புமணி – 20 தினகரன், ஜிகே வாசன் – 4, பாரிவேந்தர்
கட்சி 2, ஏ.சி..சண்முகம் 2, ஜான்பாண்டியன் – 2, திருமாறன் -1, என்.ஆர்.தனபாலன் 1, பூவை
ஜெகன்மூர்த்தி 2 என கணக்கிடப்பட்டுள்ளது. அதிமுக இரட்டை இலை சின்னத்தில் 165 தொகுதிகள்
நிற்க வேண்டும் என்பது எடப்பாடியின் விருப்பமாக இருக்கிறது.
இரண்டு நாட்களில் முடிவு தெரிந்துவிடும்.
