Share via:
சமீபத்தில் கட்சியில் சேர்ந்த பன்னீருக்கு
ராஜ்யசபா வேண்டுமானால் கொடுக்கலாம், சட்டசபை சீட் தரவே வேண்டாம் என்று பழம்பெரும் திமுக
தலைகள் எல்லாம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்.
தங்களுக்கு தேர்தலில் சீட் வேண்டும். கட்சியில்
பதவிகள் வேண்டும். வாரியங்கள், கூட்டுறவு சங்கங்களில் பொறுப்புகள் வேண்டும். தனக்கு
வேண்டியவர்களுக்கு சலுகைகள் வேண்டும் என்றெல்லாம் கேட்டுத்தான் திமுகவுக்கு வருகிறார்கள்.
அப்படியென்றால் கட்சிக்காக பல காலமாக உழைப்பவர்களுக்கு எந்தவித அங்கீகாரமும் கிடையாதா?
என்று அதிருப்தி குரல் எழுந்துள்ளது.
இப்போது திமுக முக்கியப் புள்ளிகளில் பெரும்பாலோர் அதிமுகவில்
இருந்து வந்தவர்கள்தான்.
·
எ.வ.வேலு (எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர், திருவண்ணாமலை
மாவட்டத்தின் முகமாக திகழ்பவர்; 1995ல் திமுகவில் இணைந்தார்)
- ரகுபதி
(முன்னாள் மத்திய இணையமைச்சர், மாநில அமைச்சர்; புதுக்கோட்டை மாவட்டப் புள்ளி;
1996ல் திமுகவில் இணைந்தார்)
- ஜெகத்ரட்சகன்
(முன்னாள் மத்திய இணையமைச்சர், மக்களவை எம்.பி; 1999ல் திமுகவில் இணைந்தார்)
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
(முன்னாள் அமைச்சர்; விருதுநகர் மாவட்டப் புள்ளி; 2001ல் திமுகவில் இணைந்தார்)
- எஸ்.முத்துசாமி
(எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகளை வகித்தவர்; ஈரோட்டின் முகம்; 2010ல் திமுகவில் இணைந்தார்)
- சேகர்பாபு
(வடசென்னையின் முகம்; 2011ல் திமுகவில் இணைந்தார்)
- செந்தில்
பாலாஜி (அதிமுக, அமமுக கட்சிகளில் இருந்தவர்; 2018ல் திமுகவில் சேர்ந்தார்; கரூர்,
கோவையில் முக்கியப் புள்ளி)
- தங்கதமிழ்ச்செல்வன்
(தேனி மாவட்டப் புள்ளி; ஜெயலலிதாவிற்காக தனது தொகுதியை விட்டு கொடுத்தவர்;
2019ல் திமுகவில் இணைந்தார்)
இந்த நிலையில் இப்போது மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபன்னீர்,
நிலோபர் கபில் என்று பெரும்கூட்டம் வரிசை கட்டி வந்துள்ளது.
அதிமுகவில் இருந்து பலரும் திமுகவில் இணைந்திருப்பதன்
மூலம் தேர்தல் நேரத்தில் நல்ல பலன் கிடைக்கும் என்றே வருகின்றனர். இவர்கள் எல்லோருக்கும்
அடுத்த தேர்தலில்தான் சீட் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி வருகிறார்கள்.
இவர்கள் சொல்வதை எல்லாம் கேட்பாரா ஸ்டாலின்..?
