News

செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ். 10ம் தேதி வரை தாக்குப் பிடிப்பாரா..?

Follow Us

தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுக தலைமையில் ஆட்சி அமைக்க திமுக முயற்சி செய்த கூட்டணி உண்மையோ இல்லையோ, மூன்று கட்சிகள் விஜய்க்கு எதிராக ஆளுநரை சந்தித்துப் புகார் கூறியிருக்கிறார்கள். அதோடு, ஆளுநரின் ஆட்டம் ஆரம்பமாகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வைகை ஆற்றை சுத்தப்படுத்தவில்லை என்றால் நானே களம் இறங்குவேன் என்று ஆளுநர் தெரிவித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு நிலை ஓய்வதற்குள் மீண்டும் அதிர்ச்சி தரும் அறிவிப்பு வெளியிடுள்ளார்.

அதன்படி, ’மக்கள் தங்கள் பிரச்சனைகளை ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்’ என்று புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் இதுகுறிக்க, ‘’மக்கள் கோரிக்கைக்கு இணங்க, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது அரசாங்கம் மக்களுக்காக பணியாற்ற விரும்பினால், நான் நிச்சயமாக முதலமைச்சரைத் தொடர்புகொண்டு நமது சகோதர, சகோதரிகளின் நிலை என்ன என்பதைத் தெரிவிப்பேன். இதைச் செய்ய வேண்டும் என்று நான் அவர்களிடம் கூறுவேன். இந்த குறிப்பிட்ட தீர்வுக்காக நாங்கள் இங்கே பணியாற்றுவோம்.

ஆளுநரிடமிருந்தும்,அரசாங்கத்திடமிருந்தும் உங்களுக்கு சில எதிர்பார்ப்புகள் இருந்தால், நீங்கள் நிச்சயமாக அதை எங்களிடம் கூறலாம். நீங்கள் இங்கே வந்து எங்களிடம் தெரிவிக்கலாம், நாம் அனைவரும் இணைந்து அதைச் செய்வோம். இதைச் செய்ய விரும்பும் எவருக்கும், நாங்கள் அனைவரும் உங்களுடன் துணை நிற்கிறோம். இதைச் செய்வதற்கு ஆளுநர் மாளிகை எப்போதும் உங்கள் பக்கமே இருக்கும். எதற்கும் தயங்க வேண்டாம். நீங்கள் இங்கே வந்து உங்கள் பிரச்சினைகளைச் சொல்லலாம், என் தரப்பில் செய்யக்கூடிய அனைத்தையும் நான் கட்டாயம் செய்வேன். நாங்கள் அதைச் செய்வோம்.” என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில், தவெக அரசுக்கு எதிராக தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்வி அர்லேகரிடம் ஒரேநாளில் பாஜக, திமுக, அதிமுக புகார் அளித்துள்ளன.

தவெக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லது அரசு அதிகாரியாக இல்லாத முதலமைச்சர் விஜயின் ஆலோசகர்கள் விஷ்ணு ரெட்டி மற்றும் ஜான் ஆரோக்கியசாமி கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்வி அர்லேகரை நேற்று சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மனு அளித்தனர்.

அதைத் தொடர்ந்து ஆளுநரை சந்தித்து தவெக அரசின் மீதான புகார் மனுக்களை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. வில்சன் உள்ளிட்டோர் வழங்கினர். தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி, அரசுக்கு தொடர்பில்லாதவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதாக குற்றம் சாட்டினார்.

அடுத்து ஆளுநர் ஆர்வி அர்லேகரை சந்தித்து அதிமுக எம்பி இன்பதுரை, கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் தவெக அரசுக்கு எதிராக மனு அளித்தனர். தொடர்ந்து பேசிய இன்பதுரை, தமிழ்நாட்டில் அரசியலமைப்பு சீர்குலைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

ஆளுநரை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள். விஜய் தாக்குப் பிடிப்பாரா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link