Share via:
விஜய் வரும் 10ம் தேதி கரூருக்குச் செல்ல இருக்கும் நிலையில்,
அப்போது செந்தில் பாலாஜி வெளியே இருக்கக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறாராம்.
அதனாலே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்துவருகிறது.
த.வெ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பேரம் பேசிய வழக்கில் நேரில் ஆஜராக
செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்கு சம்மன் வழங்கியது சென்னை போலிஸ். கரூரில்
ராமேஸ்வரப்பட்டியில் உள்ள பூர்விக வீட்டில் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் சம்மன்
வழங்கப்பட்டது.
சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன்
அனுப்பப்பட்டு இருந்த நிலையில், இன்று செந்தில்பாலாஜி ஆஜராகவில்லை. எனவே, அவர் வெளிநாடு
தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது
செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு எதிராகவும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது
முதலமைச்சர் கரூர் செல்வதற்குள் கைது செய்ய வேண்டும் போலீஸ் தீவிர
தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. அதுவரை இவர்கள்
கையில் சிக்கக்கூடாது என்று ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்.
யார் ஜெயிப்பது என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.