Share via:
அடங்க மறு, அத்து மீறு என்றெல்லாம் பட்டியலின மக்களுக்காகப் போராடுவதற்கு திருமாவளவனால் உருவாக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தாரக மந்திரம் இப்போது கட்டிங் போடு, கட்டப்பஞ்சாயத்து செய் என்பதாக மாறியிருக்கிறது என்பதற்கு உதாரணமே திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் பாலாஜி மீது எழுந்திருக்கும் குற்றச்சாட்டு.
சென்னை கோவளத்தில் தனியார் ஹெலிகாப்டர் போக்குவரத்து நிறுவனத்தினரை மிரட்டி லஞ்சம் கேட்டதாகவும், குண்டர்களை வைத்து தங்களை அலுவலகத்திற்குள் சிறை வைத்ததாகவும் பாலாஜி மீது அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி புகார் அளித்திருக்கிறார்.
இதற்கு பாலாஜி, ‘’அந்த நிறுவனம் கோவளத்தில் சுற்றுலாவைத் தொடங்கியதும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாகவே என்னுடைய சில சந்தேகங்களை கலெக்டரிடம் கேட்டேன். ஹெலிகாப்டர் இயக்க லைசென்ஸ் விமானப் போக்குவரத்து ஆணையரகம் கொடுத்திருக்கலாம். ஆனா ஹெலிபேடு அமைக்கறது மாதிரியான விஷயங்களில் மாநில அரசுக்கு அதிகாரங்கள் இருக்கிறது என்பதாலே சில சந்தேகங்கள் கேட்டேன். நான் தனியார் நிறுவன பிரதிநிதிகளிடம் நேரடியாகப் பேசியதே இல்லை.’’ என்கிறார்.
அதேநேரம், இந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் பட்டியலில் பாஜக, பாமக, திமுகவினர் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதோடு இது பாமகவின் தூண்டுதலில் நடக்கும் குற்றச்சாட்டு என்று சொல்லப்படுவதும் கவனிக்கத்தக்கது.
ஏனென்றால், ஹெலிகாப்டர் நிறுவனத்தை பாலாஜி மிரட்டினார் என்றால் டிஜிபி அல்லது சென்னை மாநகர கமிஷனரை சந்தித்துப் புகார் கொடுக்காமல் திமுகவின் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தகுதி நீக்கம் செய்ய கோருவது ஏன் என்பது முக்கியமான கேள்வி.
விசிக என்றாலே கட்டப்பஞ்சாயத்து என்று மாறியிருக்கும் சூழலில் திருமா இந்த விஷயத்தில் வழக்கம் போல் அமைதி காக்கிறார்.
அரசியல் என்றாலே சாக்கடைதான்.
