Share via:
அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக
செயல்பட்டு உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற
தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு நேற்று
உத்தரவிட்டுள்ளது
இந்நிலையில் இந்த வழக்கில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி
ஸ்டாலின் கைது செய்யப்பட வேண்டும் என்று அதிமுக ஆதாரத்துடன் கோரிக்கை வைத்துள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், ‘’தமிழக “பொறுப்பு” டிஜிபி-க்கு
அனுப்பிய ஆவணத் தொகுப்பில் (Dossier), பக்கம் 51-ல், “டெண்டர்களுக்கான 7.5% முதல்
10% வரையிலான கமிஷன், “Party Fund” (கட்சி நிதி) என்ற பெயரில் வசூலிக்கப்பட்டுள்ளது”
பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
தனது அமைச்சரைக் காப்பாற்ற தான் வழக்கு பதியாமல் ஸ்டாலின் அரசு
இருந்தது என்று நினைத்தால், தன்னையும், தன் மகனையும் காப்பாற்ற தான் இத்தனை நாட்கள்
வழக்கு பதியாமல் இருந்திருக்கிறார்கள்!
“தியாகி” பாலாஜிக்காக வந்த “தொட்டுப் பார், சீண்டிப்
பார்” வீடியோ, நேருவுக்கு வராமல் போனதற்கு காரணம் இது தானா? செந்தில் பாலாஜி வழக்கில்
சுத்தி சுத்தி தான் குடும்பம் மாட்டும் என்றால், நேரு வழக்கில் தொட்டாலே முதலில் மாட்டுவது
ஸ்டாலினும், அவர் மகனும் தான் போலயே ?!
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையில் ரூ. 1020 கோடி மதிப்பில்
ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள், இதில் எவ்வளவு பங்கு இந்த தந்தை,
மகன் கூட்டணிக்கு என கணக்கிட்டால், தமிழ்நாட்டுக்கு ஓராண்டு பட்ஜெட்டே போட்டுவிடலாம்!
இன்னும் இரண்டே மாதங்கள் தான்… அதிமுக ஆட்சி அமைந்ததும், எல்லா Files-ம் திறக்கப்படும்!
முகத்திரைகள் கிழிக்கப்படும்’’ என்று அறிவித்துள்ளது.
பாஜக நடவடிக்கை எடுக்குமா என்று பார்க்கலாம்.
